»   »  மாடலிங்குக்கு தாவிய அமோகா

மாடலிங்குக்கு தாவிய அமோகா

Posted By:
Subscribe to Oneindia Tamil


ஜேஜே படத்தின் இரண்டுய நாயகியரில் ஒருவரான அமோகா கையில் ஒரு படம் இல்லாததால், சினிமாவுக்கு குட்பை சொல்லி விட்டார்.

சரண் இயக்கத்தில் வெளியான ஜேஜேவில் அமோகா, பூஜா ஆகிய இரு நாயகியருக்கும் அந்தப் படம் ராசியாக அமையவில்லை.

பூஜாவுக்காவது அஜீத்தின் அட்டகாசம் உள்ளிட்ட சில படங்கள் புக் ஆகியுள்ளன. அத்தோடு ஷாலினியின் அண்ணன் ரிச்சர்டுடன் காதலும் வந்துவிட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் துரத்தித் துரத்திக் காதலித்து வருகின்றனர்.

ஆனால், அமோகா தான் சுத்தம். முதல் படத்தில் நடிப்பில் கொஞ்சமும் சோபிக்காத அமோகாவை தமிழ்த் திரையுலகம் கண்டு கொள்ளவில்லை. ஜி படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக முதலில் அமோகவை புக் செய்துவிட்டு பின்னர் திரிஷாவைக் கொண்டு வந்து அமோகாவைக் கழற்றிவிட்டுவிட்டனர்.


கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த அமோகா இந்த ஏமாற்றங்களால் நொந்து போய் சொந்த ஊரான கொல்கத்தாவுக்குத் திரும்பினார். ஆனால், ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமோ?.

மும்பை பக்கமாய் வந்து தனது பழைய மாடலிங் தொடர்புகளைப் புதுப்பித்துக் கொண்ட அமோகா இப்போது அங்கே செம பிஸி. மாடலிங்கில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அத்தோடு டிவியில் நடிக்கவும் தயார் என்று சொல்லி வாய்ப்புக்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவுக்கு முழுவதுமாகவே முழுக்குப் போட்டு விடும் முடிவுக்கு வந்துவிட்டாராம் அமோகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil