»   »  அடடா, அமிர்தா!

அடடா, அமிர்தா!

Subscribe to Oneindia Tamil

அவ்வப்போது அமிர்தம் போல சில ஹீரோயின்கள் தமிழ் சினிமாவுக்குக் கிடைப்பார்கள். அப்படிப்பட்ட அரிய நாயகியாக குளு குளு பெங்களூரிலிருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ளார் அமிர்தா.

தேனில் முங்கி எழுந்த பலா போல அப்படி ஒரு அழகு அமிர்தாவுக்கு. தமிழ் சினிமாவுக்கேற்ற வாகான தோற்றம், வசீகர முகம், வாளிப்பான தேகம் என வசதியாக இருக்கிறார்.

பார்த்தி பாஸ்கர் இயக்கத்தில் உருவாகும் ஆயிரம் நிலவே படத்தில் அமிர்தாதான் நாயகி. இசைஞானியின் அண்ணன் மறைந்த ஆர்.டி. பாஸ்கரின் மகன்தான் பார்த்தி பாஸ்கர். ஏற்கனவே பம்பரக் கண்ணாலே என்ற படத்தை இயக்கிய பார்த்தி, இப்போது ஆயிரம் நிலவே வா என்ற படத்தை இயக்குகிறார்.

இதில் பார்த்தியின் தம்பி ஹரி பாஸ்கர்தான் நாயகன். மச்சான் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஹரி பாஸ்கருக்கு ஜோடியாக நடிக்கிறார் அமிர்தா.

கன்னட இசையமைப்பாளர் ரிக்கி டிக்கோர்டரின் ஒரே மகள்தான் அமிர்தா. தேவாவின் உதவியாளராக கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பணியாற்றியவர் ரிக்கி.

அதன் பின்னர் தேவாவின் ஆசியுடன் பெங்களூர் திரும்பிய ரிக்கி அங்கு இசையமைப்பாளராக தனது இசைப் பயணத்தைத் தொடர்கிறார். அவருடைய செல்லப் புதல்வியான அமிர்தா, கன்னடத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அவரது முதல் படம் வித்யார்த்தி. அதன் பின்னர் சாணக்யா, தீப்தி என இரு படங்களில் நடித்துள்ளார் அமிர்தா. இப்போது தமிழுக்கு வந்துள்ளார்.

படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. குத்து விளக்கு போல காணப்பட்ட அமிர்தாவை ஓரம் கட்டி மாத்தாடினோம். எனக்கு சென்னை புதிதல்ல. எனது தந்தை இங்கு இருந்தபோது நாங்களும் இங்கேயே இருந்ததால் தமிழ் எனக்கு நன்கு தெரியும்.

எனது தந்தையும் திரைத் துறையில் இருப்பதால், சிறு வயதிலிருந்தே எனக்கு நடிக்க வேண்டும் என்ற வேட்கை இருந்து வந்தது. அது பின்னர் நனவானது.

பார்த்தி பாஸ்கர் எங்களது குடும்ப நண்பர். அவர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது பெருமையாக இருக்கிறது, சந்தோஷமாக இருக்கிறது.

இப்போது கன்னடம் தவிர தெலுங்கில் ஒரு படம் செய்கிறேன். அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிந்து விடும். அதன் பின்னர் தமிழில் தீவிர கவனம் செலுத்தப் போகிறேன்.

குஷ்பு, சிம்ரன் போல எனக்கும் தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் அமிர்தா.

அப்படியே நடக்கட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil