»   »  ப்ரெஞ்சு தொழிலதிபருடன் எமி ஜாக்ஸன் டேட்டிங்?

ப்ரெஞ்சு தொழிலதிபருடன் எமி ஜாக்ஸன் டேட்டிங்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எமி ஜாக்சன் அழகாக இருக்கிறாரா... கவர்ச்சியாக கிறங்கடிக்கிறாரா.. ? இந்தக் கேள்விக்கெல்லாம் நேரடி பதிலே கிடைக்காது தமிழ் சினிமா இயக்குநர்களிடம். அவரது நேரமோ என்னமோ, தமிழ், இந்தியில் உச்சத்துக்குப் போய் விட்டார். உச்ச நட்சத்திரத்தின் ஜோடியும் ஆகிவிட்டார்.

இந்தியாவில் படங்கள் நடித்தாலும், அடிக்கடி தனது சொந்த கண்டமான ஐரோப்பாவுக்கும் ஒரு 'எட்டு' போய் வருவது எமியின் வழக்கம்.

Amy dating with French businessman

சமீபத்தில் கேன்ஸ் விழாவில் பங்கேற்க பிரான்ஸ் போனவர், அங்கிருந்து தனது சொந்த நாடான இங்கிலாந்துக்குப் போயிருக்கிறார். அங்கு தனது பணக்காரக் காதலன் ஜீன் பெர்னார்ட் பெர்னாண்டஸ் வர்சினியுடன் டேட்டிங் போனாராம். வர்சின் பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேன்ஸ் விழாவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட, அது அப்படியே லண்டன் வரை தொடர்ந்திருக்கிறது. ஹோட்டலில் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு, அப்படியே ஒரே காரில் இரவு வீடு திரும்பினார்களாம்.

எமி ஏற்கெனவே ரியான் தாமஸ் மற்றும் ஜோ செல்கிர்க் ஆகிய இருவருடன் டேட்டிங் போனவர் என்பது குறிப்பிசடத்தக்கது.

இதற்கிடையில், தனது டேட்டிங் ஷெட்யூலை முடித்துக் கொண்டு அடுத்த வாரம் தொடங்கும் 2.ஓ ஷூட்டிங்கில் பங்கேற்க வசதியாக, இந்தியா திரும்புகிறாராம் எமி.

English summary
Sources revealed that actress Amy Jackson is dating a French businessman, Jean Bernard Fernandez Versini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil