»   »  நீலாம்பரிக்கு வந்த பயம் இல்லாமல் ரஜினியுடன் மோதிய ஏமி ஜாக்சன்

நீலாம்பரிக்கு வந்த பயம் இல்லாமல் ரஜினியுடன் மோதிய ஏமி ஜாக்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2.0 படத்தில் ஏமி ஜாக்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் துணிச்சலாக மோதும் சண்டை காட்சிகள் உள்ளதாம்.

ஷங்கர் மெகா பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோரை வைத்து எடுத்து வரும் பிரமாண்ட படம் 2.0. இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகளை தற்போது சென்னையில் படமாக்கி வருகிறார்கள்.


Amy fights with Rajini without fear

அண்மையில் சென்னை சாலிகிராமத்தில் கார் குண்டுவெடிப்பு காட்சியை படமாக்கினார் ஷங்கர். இந்நிலையில் படத்தில் ரஜினிகாந்தும், ஏமி ஜாக்சனும் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்கள் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


ரஜினியுடன் மோதினால் அவரது ரசிகர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற பயம் இல்லாமல் ஏமி துணிச்சலாக நடித்துள்ளாராம். முன்னதாக படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் மோதும் காட்சியில் நடிக்க பயந்தார்.


காரணம் ரஜினியின் ரசிகர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்பது தான். ஆனால் ஏமிக்கு அதை பற்றி எல்லாம் பயம் இல்லையாம்.

English summary
Buzz is that Amy Jackson fought with Rajinikanth for an action scene in 2.0.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil