»   »  எந்திரன் 2 வில் எமி ஜாக்சனா...ஆச்சரியத்தில் மூழ்கிய கோலிவுட்

எந்திரன் 2 வில் எமி ஜாக்சனா...ஆச்சரியத்தில் மூழ்கிய கோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபிகாவா இல்லை காத்ரீனாவா என்று கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை எந்திரன் 2 படத்தின் ஹீரோயின் பற்றி பட்டிமன்றம் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இவர்கள் யாரும் இல்லை ஷங்கரின் எந்திரன் 2 வில் மீண்டும் அவரது அபிமான நாயகி எமி ஜாக்சன் தான் நாயகி என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Amy Jackson in Endhiran 2?

உலகளவில் நாயகி தேடியவர் கடைசியில் எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்து விட்டாரா என்று மொத்த கோலிவுட்டினரும் தற்போது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் மூழ்கியிருக்கின்றனர்.

Amy Jackson in Endhiran 2?

ஐ படத்தில் எமியின் நடிப்பு ஷங்கரைக் கவர்ந்ததால் இந்தப் படத்திலும் அவரையே ஹீரோயினாக்கி விட்டார் என்று கூறுகின்றனர்.

விரைவில் நாயகி பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எந்திரன் 2 படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அமீர்கான் தொடங்கி விக்ரம் வரை பலரின் பெயரும் வில்லனாக நடிக்க பரீசிலிக்கப்பட்டது.

Amy Jackson in Endhiran 2?

ஹீரோயின் தேர்வில் பாலிவுட்டை விட்டு கோலிவுட்டிற்கு வந்த ஷங்கர் வில்லன் தேர்வில் ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். ஆமாம் தற்போது எந்திரன் 2 வில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்டிடம் ஷங்கர் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்.

சீக்கிரம் முடிவு பண்ணுங்கப்பா....

English summary
Actress Amy Jackson is playing the female lead role in Endhiran 2, Rajnikanth and Amy Jackson pairing for the first time.after the completion of Pa.Ranjith's kabali Rajinikanth will be starting his next flick with Director Shankar which is Enthiran 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil