»   »  மாஜி காதலரின் பெயரை கையில் இருந்து அழித்த ஏமி ஜாக்சன்

மாஜி காதலரின் பெயரை கையில் இருந்து அழித்த ஏமி ஜாக்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஏமி ஜாக்சன் தனது கையில் பச்சை குத்தியிருந்த முன்னாள் காதலரின் பெயரை அழித்துவிட்டார்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்துள்ள ஐ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் ஏமி ஜாக்சன். சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் ஏமி ஜாக்சன் நடித்திருந்தார். அப்போது அவருக்கும் சிம்பு கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

Amy Jackson erases tattoo of ex-boyfriend's name

சில காலம் அவர்கள் ஜோடி போட்டு பல இடங்களுக்கு சென்றனர். காதலில் விழுந்த ஏமி தனது கையில் மேரா பியார், மேரா பிரதீக் என்று பச்சைக் குத்திக் கொண்டார். இந்நிலையில் ஏமியும், பிரதீக்கும் பிரிந்துவிட்டனர்.

இருப்பினும் ஏமி கையில் பச்சை மட்டும் அப்படியே இருந்து வந்தது. இந்நிலையில் அவர் அந்த பச்சையை அழித்துவிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

என் கையில் இருந்த பச்சையை அழித்துவிட்டேன். இனி நான் பச்சையே குத்த மாட்டேன். அப்படியே பச்சை குத்துவது என்றாலும் பல முறை யோசிப்பேன் என்றார்.

English summary
Amy Jackson has erased tattoo of her former boyfriend Prateik Babbar's name.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil