»   »  ஷங்கருக்கு தேதி கொடுக்கும் முன் யோசிக்கச் சொன்னார்கள் நலம் விரும்பிகள்!- எமி ஜாக்ஸன்

ஷங்கருக்கு தேதி கொடுக்கும் முன் யோசிக்கச் சொன்னார்கள் நலம் விரும்பிகள்!- எமி ஜாக்ஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கர் படங்கள் என்றாலே முடிய ரொம்ப நாள் பிடிக்கும்... எனவே மீண்டும் அவர் படத்தில் நடிக்கும் முன் யோசிக்குமாறு நண்பர்கள் கூறினார்கள் என்று எமி ஜாக்ஸன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தவர் எமி ஜாக்ஸன். அந்தப் படத்துக்காக 200 நாட்கள் அவர் கால்ஷீட் கொடுத்திருந்தார்.

ஷங்கர் அடுத்து ரஜினியை வைத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.ஓ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் எமி ஜாக்ஸன்.

சூதாட்டம்

சூதாட்டம்

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அவர் சமீபத்தில் கூறியிருப்பதாவது:

ஐ படத்துக்காக 2 ஆண்டுகள் ஒதுக்கியிருந்தேன். என்னைப் போன்ற நடிகைகள் இரு ஆண்டுகள் ஒரே படத்தில் முடங்குவது பெரிய சூதாட்டம் மாதிரிதான். ஆனால் அந்தப் படத்தின் வெற்றி என்னை பெரிய ரேஞ்சுக்கு கொண்டு வந்தது.

நலம் விரும்பிகள்

நலம் விரும்பிகள்

இப்போது மீண்டும் ஷங்கர் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள முடிவு செய்த போது, என் நலம் விரும்பிகள் எதற்கும் ஒரு முறை யோசிக்குமாறு கேட்டார்கள்.

கடவுளுக்கு நன்றி

கடவுளுக்கு நன்றி

ஆனால் ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தில் ஒரு அங்கமாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

விஜய்யுடன்

விஜய்யுடன்

எமி ஜாக்ஸன் இப்போது தமிழில் விஜய்யுடன் தெறி மற்றும் உதயநிதியுடன் கெத்து படங்களில் நடித்து வருகிறார்.

English summary
Actress Amy Jackson thanked God for giving chance to share screen space with Rajini in Shankar's magnum opus 2.O.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil