»   »  'பாகுபலி'க்காக பாலிவுட் பட வாய்ப்பை உதறித்தள்ளிய ஏமி ஜாக்சன்

'பாகுபலி'க்காக பாலிவுட் பட வாய்ப்பை உதறித்தள்ளிய ஏமி ஜாக்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏமி ஜாக்சன் பிரபாஸ் படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளாராம்.

இங்கிலாந்தில் இருந்து வந்துள்ள அழகுப் பதுமை ஏமி ஜாக்சன் கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் தளபதியுடன் நடித்துவிட்டார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.

ஏமி

ஏமி

ஏமி தேவி மற்றும் ஃப்ரீக்கி அலி ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகியுள்ளன. அதில் ஃப்ரீக்கி அலி சல்மான் கானின் தம்பி சொஹைல் கான் இயக்கியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாஃப் கேர்ள்ஃபிரெண்ட்

ஹாஃப் கேர்ள்ஃபிரெண்ட்

அர்ஜுன் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிக்கும் ஹாஃப் கேர்ள்ஃபிரெண்ட் இந்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்குமாறு ஏமியை கேட்டுள்ளனர். அம்மணியோ சாரி, வேறு யாரையாவது நடிக்க வையுங்கள் என்று கூறிவிட்டாராம்.

பிரபாஸ்

பிரபாஸ்

பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதை ஏமி ஏற்காததற்கு காரணம் பாகுபலி பிரபாஸ். ஆம், பிரபாஸ் நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஏமி.

அது சரி

அது சரி

சுஜீத் பிரபாஸை வைத்து இயக்கும் காதல் படத்தில் ஏமி தான் ஹீரோயின். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும். அது சரி பாகுபலிக்கே ஜோடியாக வாய்ப்பு கிடைத்துள்ளபோது பாலிவுட்டு எம்மாத்திரம்.

English summary
Amy Jackson has refused to accept a Bollywood offer for Baahubali Prabhas.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil