»   »  அடுத்த ஏழரையை கூட்டப்போகும் ஏமி ஜாக்சன்?

அடுத்த ஏழரையை கூட்டப்போகும் ஏமி ஜாக்சன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விலங்குகள் வதைக்கு எதிரான குறும்படம் ஒன்றை தயாரிக்க உள்ளாராம் நடிகை ஏமி ஜாக்சன்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமாக இருந்த பீட்டா அமைப்பின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளவர் நடிகை ஏமி ஜாக்சன். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக அமைதி புரட்சி நடந்தபோது கடும் விமர்சனத்திற்குள்ளானார் ஏமி.

அவரை பீட்டாவில் இருந்து விலகுமாறு பலர் வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்தவர் ஏமி. ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டாஇந்தியா மனுவில் கையெழுத்திடுமாறு அவர் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களை கேட்டுக் கொண்டார்.

குறும்படம்

குறும்படம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களின் கோபத்திற்கு ஆளான ஏமி தற்போது விலங்குகள் வதைக்கு எதிரான குறும்படம் ஒன்றை தயாரிக்க உள்ளாராம்.

ஏமி

ஏமி

குறும்படத்தை தயாரிப்பதோடு சரி அதில் நான் நடிக்கவில்லை என்று ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார். விலங்குகள் வதைக்கப்படுவது முக்கியமான பிரச்சனை என்கிறார் ஏமி. காளைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக பீட்டா தொடர்ந்து கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2.0

2.0

ஏமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் படங்களில் கவனம் செலுத்த சென்னையில் வீடு வாங்கி குடியேறியுள்ளார்.

English summary
Actress Amy Jackson is set to produce a short film against cruelty towards animals. Though she is producing, she is not acting in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil