»   »  எந்திரன் 2-ல் என்னவாக வருகிறார் எமி ஜாக்சன்?

எந்திரன் 2-ல் என்னவாக வருகிறார் எமி ஜாக்சன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எந்திரனின் இரண்டாம் பாகமான 2.ஓவில் எமி ஜாக்ஸன்தான் நாயகி என்று தெரிந்ததும், இவர் ரஜினிக்கு ஜோடியா, படத்தில் அவர் பாத்திரம் என்ன என்றெல்லாம் யூகங்கள் வெளியாகி வந்தன.

இப்போது எமி ஜாக்ஸன் என்னவாக வருகிறார் என்று ஒரு க்ளூ கிடைத்துள்ளது.

இப்படத்தில் எமி ஜாக்சன் ஒரு ரோபோவாக நடிப்பதாக ஏற்கெனவே செய்தி வெளிவந்தது. ஆனால், இப்போது ரோபோவை உருவாக்கும் விஞ்ஞானி ரஜினிக்கு உதவியாளராக நடிக்கிறாராம். உதவியாளராக வந்து, அப்படியே ஜோடியாகிவிடுவார் போலிருக்கிறது!

Amy Jackson's role revealed in 2.O

ஷங்கர் இயக்கும் இப்படத்தில் ரஜினி இரு வேடங்களிலும், வில்லனாக அக்ஷய்குமாரும் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னைக்கு அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்போது கபாலி படப்பிடிப்புக்காக ரஜினி மலேசியா சென்றிருப்பதால், அவர் சம்பந்தப்படாத காட்சிகளை ஷங்கர் படமாக்கி வருகிறார்.

Read more about: rajini, amy jackson, ரஜினி
English summary
Amy Jackson's role in Rajinikanth starrer 2.O has been revealed and according to the sources, the actress is appearing as the aid of scientist Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil