லண்டனில் நைட் பார்ட்டி.. புதிய காதலருடன் லூட்டி அடிக்கும் எமி ஜாக்சன்.. தீயாய் பரவும் போட்டோ!
லண்டன்: தனது புதிய காதலருடன் நடிகை எமி ஜாக்சன் லண்டன் வீதிகளில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
Recommended Video
மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன்.
தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்த எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டுவை நிச்சயதார்த்தம் செய்த நிலையில், அவருடன் ஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்டார்.

எமி ஜாக்சன்
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தாண்டவம், தெறி, ஐ, தங்கமகன், கெத்து, 2.0 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜ் பன்னயுட்டுவை பார்ட்னர் ஆக்கி குடும்ப வாழ்வில் செட்டில் ஆனார்.

குழந்தையும் பிறந்துடுச்சு
ஜார்ஜ் மற்றும் எமி ஜாக்சன் இருவரும் படு ஜாலியாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க எமி ஜாக்சன் ஆர்வம் காட்டி வந்த நிலையில், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

அடுத்த பாய் ஃபிரெண்ட்
காஸிப் கேர்ள், வைட் கோல்ட், ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வரும் அமெரிக்க நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் தற்போது டேட்டிங்கில் இருந்து வருகிறார் எமி ஜாக்சன். அவருடன் லண்டன் வீதிகளில் அடிக்கடி இரவு நேர பார்ட்டிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

லண்டன் வீதிகளில்
புதிய காதலர்களான எமி ஜாக்சன் மற்றும் அமெரிக்க நடிகர் எட் வெஸ்ட்விக் இருவரும் லண்டன் வீதிகளில் நேற்று இரவு எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை எட் வெஸ்ட்விக்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும், நடிகை எமி ஜாக்சன் எட் வெஸ்ட்விக் உடன் பல இடங்களுக்கு சுற்றித் திரியும் வீடியோக்களையும் டின்னருக்கு சென்ற புகைப்படங்களையும் பதிவிட்டு ஜார்ஜை செம கடுப்பாக்கி வருகிறார்.

திருமணம் செய்துக் கொள்வாரா
ஜார்ஜ் உடன் நிச்சயம் மட்டுமே செய்து அவருடன் குழந்தையை பெற்றுக் கொண்ட எமி ஜாக்சன் இந்த அமெரிக்க நடிகரையாவது காதலித்து திருமணம் செய்து கொள்வாரா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுப்பி வருகின்றனர். குழந்தை ஆண்ட்ரியாஸ் தற்போது யார் பாதுகாப்பில் இருக்கிறார் என்றும் எமி ஜாக்சனிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். எமி ஜாக்சனின் அம்மா தான் குழந்தையை பராமரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











