»   »  பிரபு தேவா ஆல்பத்தில் பாடகியானார் எமி ஜாக்சன்!

பிரபு தேவா ஆல்பத்தில் பாடகியானார் எமி ஜாக்சன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்திய சினிமாவுக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு அந்நிய முகம் எமி ஜாக்ஸன். ஆனால் இன்று இந்திய சினிமாவின் டாப் நாயகியாகிவிட்டார்.

தமிழ், இந்தியில் அவர் இப்போது முன்னணி நடிகைகளுள் ஒருவர். ரஜினி, விஜய் என முதல் நிலை நாயகர்களுக்கு ஜோடி அவர்தான்.

இவர் இப்போது சொந்தக் குரலில் பாடவும் ஆரம்பித்துள்ளார். நல்ல வேளை தமிழில் அல்ல, இந்தியில்.

பிரபு தேவா

பிரபு தேவா

நடிகர் பிரபுதேவா பாலிவுட்டில் இயக்கி வருகிற ஆல்பம் 'சிங் இஸ் பிளிங்.' மஞ்ச் முசிக் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

எமி பாட்டு

எமி பாட்டு

இப்படத்துக்காக வெவ்வேறு சூழல்களில் தோன்றும் பாடல் ஒன்றுக்காக எமியை பாடகியாக்கி இருக்கிறார். பஞ்சாபி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகும் ஆல்பத்திற்காக பாட உள்ளார் எமி.

ஆட்டமும் உண்டு

ஆட்டமும் உண்டு

படப்பிடிப்பு ஒன்றில் இருந்த எமியை தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வரும் படி மஞ்ச் அழைத்து பாடலை பாடச் சொல்ல, சற்றும் தயங்காமல் பாட ஆரம்பித்து விட்டாராம் எமி ஜாக்சன். பாடுவதோடு நில்லாமல் இப்பாடலுக்கான காட்சிகளிலும் ஆட உள்ளார் எமி.

ஆசை நிறைவேறிடுச்சி

ஆசை நிறைவேறிடுச்சி

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,"17-ஆவது வயதாக இருக்கும் போது எனது தங்கையுடன் பள்ளியிலிருந்து காரில் திரும்பும் போது நான்தான் காரை ஓட்டி வருவேன்.

அப்போது 90-களில் பிரபலமான ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஆங்கில பாடல்களை பாடிக் கொண்டே வருவேன். மியூசிக் ஆல்பம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது,'' என்று குறிப்பிட்டுள்ளார் எமி.

English summary
Amy Jackson now turned as Singer in Prabhu Deva's album Singh is Bling.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil