»   »  எந்திரன் 2 வில் எமி ஜாக்சனும் ரோபோவாம்- ஆனா ஹீரோயின் இல்லையாம்!

எந்திரன் 2 வில் எமி ஜாக்சனும் ரோபோவாம்- ஆனா ஹீரோயின் இல்லையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் மதராசப் பட்டினம் மூலமாக அறிமுகமான எமி ஜாக்‌சன் "எந்திரன் 2" திரைப்படத்தில் ரோபோவாக நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டு படங்களில் நடித்த பெருமை மனீஷா கொய்ராலா, ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு மட்டுமே உண்டு. இதில் மனீஷா கொய்ராலா இந்தியன், முதல்வன் ஆகிய படங்களில் நடித்தார்.

ஐஸ்வர்யாராய் ஜீன்ஸ், எந்திரன் படங்களில் நடித்தார். மற்றபடி ஷங்கர் எந்த நடிகையையும் ஒரு படத்திற்கு மேல் நடிக்க வைத்ததில்லை.

முன்னணி அந்தஸ்து:

முன்னணி அந்தஸ்து:

ஆனால் இப்போது லண்டன் நடிகை எமிஜாக்சனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் அடுத்தடுத்து கிடைத்திருக்கிறது. ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் நடித்தவர் அடுத்து எந்திரன்-2 படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில், விஜய், தனுஷ் என்று மெகா நடிகர்களுடனும் நடித்து வருவதால் கோலிவுட்டில் முன்னணி நடிகையாகி விட்டார் எமிஜாக்சன்.

ரஜினிக்கு ஜோடி இல்லை:

ரஜினிக்கு ஜோடி இல்லை:

மேலும், எந்திரன்-2 படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதாகத்தான் இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது விசாரித்தால், ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பதே இன்னும் முடிவாகவில்லையாம்.

ரோபோவா?:

ரோபோவா?:

சில முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அதோடு இந்த படத்தில் எமிஜாக்சன் ரோபோ வேடத்தில் நடிக்கிறாராம். அதற்கான ரிகர்சல் சம்பந்தமாகத்தான் சமீபத்தில் பங்கேற்று இருக்கிறார்.

கத்தி வில்லன் கன்பார்ம்:

கத்தி வில்லன் கன்பார்ம்:

இதற்கிடையே எந்திரன்-2 படத்தில் ஏற்கனவே ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிப்பதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இப்போது விஜய்யின் கத்தி படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் நீல்நிதின் முகேசும் ஒரு வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

    English summary
    Actress Amy jakson going to be robot in Shankar's Enthiran-2.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil