»   »  'தல' கூட நடிக்கணும், அதுவும் இந்த வருஷமே: இது ஏமியின் ஆசை

'தல' கூட நடிக்கணும், அதுவும் இந்த வருஷமே: இது ஏமியின் ஆசை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் தான் தனக்கு பிடித்த ஹீரோ என்று கூறும் நடிகை ஏமி ஜாக்சனுக்கு அஜீத்துடன் ஒரு படத்திலாவது அதுவும் இந்த வருடமே நடிக்க வேண்டும் என்று ஆசை வந்துள்ளது.

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தாலும் இந்தியாவில் படங்களில் நடித்து வருகிறார் ஏமி ஜாக்சன். பெரும்பாலும் கோலிவுட் படங்களில் நடிக்கும் அவர் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஐ, தங்க மகன் ஆகிய படங்கள் வெளியாகின.

Amy wants to act with Ajith

அவர் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து கெத்து படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் விஜய்யின் தெறி படத்திலும், சூப்பார் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திலும் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கிறார்.

இந்நிலையில் ஏமி கூறுகையில்,

பாக்ஸ் ஆபீஸ் கிங்கான அஜீத்துடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அதுவும் இந்த ஆண்டே நடிக்க வேண்டும். எனக்கு பிடித்த ஹீரோ தனுஷ் தான் என்றார்.

English summary
Amy Jackson wants to act with Thala Ajith and that too in this year itself.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil