»   »  தமிழில் வாய்ப்புகள் இல்லை... மீண்டும் தெலுங்குக்கே போகும் ஆனந்தி

தமிழில் வாய்ப்புகள் இல்லை... மீண்டும் தெலுங்குக்கே போகும் ஆனந்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் சில படங்களில் கண்ணுக்கே தெரியாத கேரக்டர்களில் நடித்து வந்தவர் ஆனந்தி. கயல் படம் மூலம் தமிழுக்கு வந்தார். தொடர்ந்து சண்டிவீரன், த்ரிஷா இல்லனா நயன் தாரா என நடித்தவர் ஒரு கட்டத்தில் ஜிவி.பிரகாஷ் படங்களில் மட்டும்தான் நடிப்பார் என்ற நிலை உருவானது.

Anandhi's re entry in Telugu

ஆனந்தி கையில் இப்போது தமிழில் இரண்டு படங்கள்தான். அந்த இரண்டு படங்களும் ரிலீஸுக்கே தயாராகி விட்டன. ஜிவி.பிரகாஷுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டதால் மற்றவர்களும் கண்டுகொள்ளவில்லை. எனவே தெலுங்குப் பக்கம் மீண்டும் கவனம் செலுத்திவருகிறார்.

இந்த முயற்சிக்குப் பலனாக பவர்ஸ்டார் பவன் கல்யாண் படத்தில் தங்கை வேடம் கிடைத்திருக்கிறது. தமிழில் அஜித் நடிப்பில் உருவான வேதாளம் படத்தின் ரீமேக் தான் இது. தமிழில் லட்சுமி மேனன் நடித்த தங்கை கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் ஆனந்தி.

English summary
Due to lack of offers in Tamil, Anandhi is make her re entry in Tollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil