»   »  காதலானதே ஆனந்தி

காதலானதே ஆனந்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

அறிமுக நாயகி ஆனந்தி கோலிவுட்டின் நீக்கு போக்குகளை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்.

காதலுக்காக இந்து-முஸ்லீம் வன்முறையாளர்களை எதிர்த்துப் போராடுகின்ற ஒரு இளைஞனின் கதையை காதலானதே என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள். வயசுப் பசங்க படத்தில் கூட்டத்தோடு கோவிந்தா போட்ட அனுஷ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக ஆனந்தி என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். இவர்களோடும் அம்பிகா, தலைவாசல் விஜய், பயில்வான் ரங்கநாதன், ஓமக்குச்சி நரசிம்மன் ஆகியோர் நடிக்கிறார்கள். தேவா இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு சென்னை, குடியாத்தம், வேலூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் புதுமுகம் என்றால் காதல் காட்சிகளில் கதாநாயகர்களுடன் நெருங்கி நடிக்கவும், ஆடை விஷயத்தில் இயக்குனரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதிலும் சற்று கூச்சப்படுவார்கள்.

ஆனால் காதலானதே படப்பிடிப்பில் ஆனந்தி காட்டும் தாராளத்தைப் பார்த்து, இவர் புதுமுகமா என்று எல்லாரும் ஆச்சரியப்படுகிறார்கள். அந்தளவுக்கு ஒத்துழைப்பு. முதல் படத்திலேயே இந்தளவுக்கு கவர்ச்சி காட்டுகிறீர்களே என்று கேட்டால்,

கவர்ச்சி காட்டுவதில் என்ன தப்பு? இந்த வயதில் இப்படி நடிக்காமல், அம்மா நடிகைகள் மாதிரியா நடிக்க முடியும்? இப்போது சினிமா பார்க்க வருபவர்களில் முக்கால்வாசிப் பேர் கல்லூரி மாணவர்கள் எனும்போது அவர்களுக்கு ஏத்த மாதிரிதான் நடிக்க வேண்டும்.

எனவே கவர்ச்சியாக நடிப்பேன். ஆனால் ஒருபோதும் ஆபாசமாக நடிக்க மாட்டேன் என்று தன்னிலை விளக்கம் அளித்தார். இது கூட 10, 15 படங்களில் நடித்த அனுபவம் உடைய நடிகைகள் பேசும் பேச்சு போல்தான் இருக்கிறது.

நடிக்க வராவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள் என்று கேட்டால் டாக்டராகவோ, கலெக்டராகவோ ஆகியிருப்பேன் என்று சொன்னாலும் சொல்வார். அதனால் அதைத் தவிர்த்து விட்டு, மேலே பேசச் சொன்னபோது, எனக்கு மிகவும் கூச்ச சுபாவம் என்றார் ஆனந்தி.

ம்ஹூம். படங்களைப் பார்த்தாலே ஆனந்தியின் கூச்சம் தெரியுது.

பி.கு: இவருக்கு சொந்த ஊர் வேலூர் பக்கம்தானாம்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil