For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரொம்ப ஃபிளாட்டா இருக்க.. அந்த இடத்தை பெரிதாக்குன்னு கமெண்ட் பண்ணாங்க.. அனன்யா பாண்டே ஆதங்கம்!

  |

  மும்பை: சினிமாவுக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட இல்லை. அப்பா நடிகர் என்பதால், பாலிவுட்டில் இன்னொரு நெப்போடிச நடிகை வந்து விட்டார் என கிண்டல் பண்ணுவாங்க என்றே அதை தவிர்த்து வந்தேன்.

  ஆனால், கரண் ஜோஹர் அங்கிள் கட்டாயத்தின் பேரில் நடிகையாக அறிமுகமானேன்.

  ஆரம்பத்தில் என்னுடைய ஒல்லியான தேகத்தை பார்த்து ஏகப்பட்ட பச்சையான கமெண்ட்டுகளை ரசிகர்களும் சில பிரபலங்களும் சொன்னது இன்னமும் நெஞ்சில் முள்ளாக தைக்கிறது என ஆதங்கப்பட்டு பேசி உள்ளார்.

  100 கோடி செலவு.. சர்ச்சை நடிகையால் தெருவுக்கு வந்த தயாரிப்பாளர் !100 கோடி செலவு.. சர்ச்சை நடிகையால் தெருவுக்கு வந்த தயாரிப்பாளர் !

  வில்லன் நடிகர் மகள்

  வில்லன் நடிகர் மகள்

  சுன்கி பாண்டே என பிரபல பாலிவுட் வில்லன் நடிகரின் மகள் தான் அனன்யா பாண்டே. சினிமாவுக்கு வருவதாக நான் எந்தவித வாக்குறுதியும் யாருக்கும் அளிக்கவில்லை. ஆனால், கரண் ஜோஹர் தயாரிப்பில் வெளியான ஸ்டூடன் ஆஃப் தி இயர் 2 படத்தில் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் ஆனேன் என சமீபத்தில் ரன்வீர் சிங்கின் நிகழ்ச்சியில் பேசிய அனன்யா பாண்டே தனது மனதில் மண்டிக் கிடந்த பல ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்துள்ளார்.

  தீபிகா படுகோன் உடன்

  தீபிகா படுகோன் உடன்

  சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான தீபிகா படுகோனின் அடல்ட் படமான கெஹ்ரியான் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அசத்தி இருந்தார் அனன்யா பாண்டே. பாலிவுட் ரசிகர்களின் இளம் கனவுக் கன்னியாக வலம் வரும் அனன்யா பாண்டே சினிமாவில் அறிமுகம் ஆன நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்துள்ளார்.

  மார்பகத்தை பெரிதாக்க

  மார்பகத்தை பெரிதாக்க

  ரசிகர்கள் மற்றும் சில சினிமா பிரபலங்கள் ஆரம்பத்தில் என்னை பார்த்து ரொம்பவே ஒல்லியா இருக்கீங்க என்றும் உடல் எடையை சற்றே அதிகரித்தால் நல்லா இருக்கும் என்றனர். சிலர், கொஞ்சம் எல்லை மீறி மார்பகத்தை பெரிதாக்கினால் எடுப்பாக இருக்கும் என்றும், முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சில இடங்களை சரி செய்தால் தான் ஹீரோயினாக தெரிவீர்கள் என்றும் பேசியது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  என் உடம்பு என் இஷ்டம்

  என் உடம்பு என் இஷ்டம்

  ஒவ்வொருவருக்கும் தங்கள் உடம்பை எப்படி பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். மற்றவர்கள் வந்து கண்டபடி எல்லை மீறி அட்வைஸ் செய்வது ஏற்புடையது அல்ல. குண்டானவர்களை ஸ்லிம்மாக சொல்வது. ஒல்லியாக இருப்பவர்களை குண்டாக சொல்வது என அதிகாரம் செய்வதைத் தான் தாங்க முடியவில்லை எனக் கூறி ஆதங்கப்பட்டுள்ளார்.

  Recommended Video

  Anantham Team | Anantham reach பயங்கரமா இருக்கு | Filmibeat Tamil
  விஜய் தேவரகொண்டா படத்தில்

  விஜய் தேவரகொண்டா படத்தில்

  விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் நடிப்பில் உருவாகி உள்ள லைகர் திரைப்படம் விரைவில் ரிலீசாக போகிறது. அந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். இந்நிலையில், அனன்யா பாண்டே இப்படியொரு பேட்டி கொடுத்திருப்பது அவரது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. நீங்க எப்படி இருந்தாலும், எங்களுக்குப் பிடிக்கும் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

  English summary
  Vijay Deverakonda’s Liger movie heroine Ananya Panday opens up about her body shaming experience. Some people says, ‘you should fix this and fix that, like get a boob job or change something about your face.” Hurts are more.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X