Ananya Panday: ஆத்தி.. ஆமையுடன் கடலில் நீச்சல் அடிக்கும் அனன்யா பாண்டே.. வெள்ளை பிகினியில் வேறலெவல்!

மும்பை: தம்பி ஆஹான் பாண்டேவின் அறிமுக படமான சையாரா வெளியாகி 500 கோடி வசூலை குவித்து ஓடிடியிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது. அந்த சந்தோஷத்தில் மாலத்தீவில் சுற்றுலா செய்து வரும் நடிகை அனன்யா பாண்டே ஆமையுடன் கடலில் நீச்சல் போடும் போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பாலிவுட்டில் இளம் சென்சேஷனல் வாரிசு நடிகையான அனன்யா பாண்டே விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த லைகர் திரைப்படம் படுதோல்வியை அடைந்தது. அனன்யா பாண்டேவுக்கு நடிப்பே வரலை என பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார்.

Ananya Panday shares some underwater swimming photos at Maldives
Photo Credit:

ஆனால், தனக்கு நடிப்பு வரும் என்பதை அடுத்தடுத்து சில படங்கள் மூலமாகவும் வெப்சீரிஸ் மூலமாகவும் அனன்யா பாண்டே நிரூபிக்க முயற்சி செய்தார். ஆனால், அவரை விட அவரது சகோதரர் ஆஹான் பாண்டேவின் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவில் அனன்யா பாண்டே: பாலிவுட்டின் பழம்பெரும் வில்லன் நடிகர் சுன்கி பாண்டேவின் மகள் தான் அனன்யா பாண்டே, 26 வயதாகும் அவர் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். ஜான்வி கபூர் உள்ளிட்ட வாரிசு நடிகைகளுடன் போட்டி போட்டு படங்களில் நடித்து வரும் அனன்யா பாண்டே சமீபத்தில் விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

Ananya Panday shares some underwater swimming photos at Maldives
Photo Credit:

ஆமையுடன் நீச்சல்: ஆழ்கடலில் நீச்சல் அடிப்பது, ஸ்கூபா டைவிங் செல்வது என மாலத்தீவில் ஏகப்பட்ட சாகசங்களை எக்ஸ்ப்ளோர் செய்துள்ளார் அனன்யா பாண்டே. அவர் கடலில் நீச்சல் அடிக்கும் போட்டோவில் அவருக்கு அருகே ஆமையும் நீச்சல் அடித்துக் கொண்டு போவதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஒயிட் பிகினியில் அல்ட்ரா கிளாமர்: அனன்யா பாண்டே தீபிகா படுகோன் உடன் இணைந்து கெஹ்ரியான் படத்தில் நடிக்கும் போதே பிகினி காட்சிகளில் எல்லாம் செம போல்டாக நடித்திருந்தார். இந்நிலையில், மாலத்தீவில் வெள்ளை நிற பிகினி உடையை அணிந்துக் கொண்டு அவர் படுபோல்டாக வெளியிட்ட புகைப்படம் சர்வதேச அளவில் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மாலத்தீவில் மஜா பண்ணும் அனன்யா பாண்டே கடைசியாக இந்த ஆண்டு அக்‌ஷய் குமார், மாதவன் நடிப்பில் வெளியான கேசரி சாப்டர் 2 படத்தில் நடித்திருந்தார். Tu Meri Main Tera Main Tera Tu Meri மற்றும் Chand Mera Dil உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவரது சகோதரர் ஆஹான் பாண்டே நடித்த சையாரா திரைப்படம் செப்டம்பர் 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X