மீண்டும் வழக்கு, சிக்கலில் சிக்கிய சமந்தா...எதுக்குன்னு தெரியுமா ?

ஐதராபாத் : நாக சைதன்யா உடன் விவாகரத்தை அறிவிப்பதற்கும் முன்பும் வதந்திகளில் சிக்கிய சமந்தா, விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகும் பல சிக்கலில் சிக்கினார். விவாகரத்திற்கு அவர் தான் காரணம் என பலர் குற்றம்சாட்டி, அவதூறு பரப்பினர்.

இதனால் தெலுங்கு யூட்யூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்தார். அதில் வெற்றியும் பெற்ற சமந்தா, பிறகு மன அமைதிக்காக ஆன்மிக பயணம் கிளம்பி சென்றார். துபாயில் சில நாட்கள் ஓய்விற்கு பிறகு சமீபத்தில் தான் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார்.

அயிட்டம் சாங்கில் சமந்தா

அயிட்டம் சாங்கில் சமந்தா

அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கும் புஷ்பா படத்தில் முதல் முறையாக அயிட்டம் சாங் ஒன்றில் அல்லு அர்ஜுனுடன் நடனமாடினார். இந்த பாடலுக்காக சமந்தாவிற்கு ரூ.1.5 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டது. புஷ்பா படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக இந்த பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

டிசம்பர் 17 ல் ரிலீஸ்

டிசம்பர் 17 ல் ரிலீஸ்

சுகுமார் இயக்கிய இந்த படத்தின் லிரிக் பாடலான ஓ சொல்றியா ஓ ஓ சொல்றியா என தமிழில் துவங்கும் இந்த பாடல் டிசம்பர் 10 ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த படம் தெலுங்கு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 17 ம் தேதி உல்கம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இத்தனை கோடி பட்ஜெட்டா

இத்தனை கோடி பட்ஜெட்டா

செம்மர கடத்தல்காரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் கிட்டதட்ட ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Recommended Video

Samantha in Tirumala Tirupati After her Divorce | Pushpa Samantha Song
சமந்தா பாடலுக்கு எதிராக வழக்கு

சமந்தா பாடலுக்கு எதிராக வழக்கு

இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஒருவர் இந்த பாடலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடலில் வரும் வரிகள் ஆண்கள் மோசமான மனநிலை உடையவர்கள், அவர்கள் எப்போதும் பாலியல் எண்ணங்களுடனேயே இருப்பவர்கள் என்ற அர்த்தம் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X