»   »  எடுத்து வைங்க ரூவா 25 லட்சத்தை..! - ஆன்ட்ரியா பிடிவாதம்

எடுத்து வைங்க ரூவா 25 லட்சத்தை..! - ஆன்ட்ரியா பிடிவாதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Andrea gets Rs 25 lakh for a single song
சென்னை: சொந்த குரலில் பாடி, அந்த பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட நான் ரெடி... ஆனால் சம்பளம் ரூ 25 லட்சம் தந்துவிட வேண்டும் என்ற புதிய முடிவுக்கு வந்திருக்கிறார் ஆன்ட்ரியா.

பிரசன்னா, தனுஷ், கார்த்தி போன்றவர்களுடன் நடித்துக் கொண்டிருந்த ஆன்ட்ரியா, கமலுடன் 'விஸ்வரூபம்' படத்தில் நடித்த பின் தன் மார்க்கெட் உயரும், சம்பளத்தையும் ஏற்றிவிடலாம் என்று நினைத்திருந்தார்.

ஆனால் அவர் நினைப்பில் விழுந்தது மண். புதுப்படங்களில் இரண்டாவது ஹீரோயினாகக் கூட கேட்டு வரவில்லை யாரும்.

அடுத்து வரவிருக்கும் கமலின் விஸ்வரூபம்-2' படத்தை எதிர்பார்க்கிறார். காரணம் இதில் அவருக்கு பிரதான நாயகி வேடமாம். எனவே இந்தப் படம் வந்தால் சம்பளத்தை கணிசமாக உயர்த்தும் முடிவில் இருக்கும் அவர், அதற்கு முன்னோட்டமாக ஒருவேலை பார்த்திருக்கிறார்.

'பிரம்மன்' என்ற படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு ஆன்ட்ரியா ரூ.25 லட்சம் கேட்டு, அதைப் பெற்றும்விட்டார்.

ஆரம்பத்தில், 'சம்பளம் ரொம்ப அதிகமாக இருக்கிறதே?' என்று தயாரிப்பாளர் கேட்டுப் பார்த்திருக்கிறார். உடனே ஆன்ட்ரியா, ''அந்த பாடலையும் நானே பாடி விடுகிறேன். பாட்டு, நடனம் இரண்டுக்கும் சேர்த்து ரூ.25 லட்சம் கொடுங்கள்'' என்றாராம். தயாரிப்பாளருக்கு அவ்வளவு பணம் கொடுக்க விருப்பம் இல்லை.

ஆனால், அந்த பாடல் காட்சியில் ஆன்ட்ரியா ஆடினால்தான் பொருத்தமாக இருக்கும் என்று இயக்குநர் பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர், ஆன்ட்ரியாவுக்கு ரூ.25 லட்சம் கொடுத்தாராம்.

அட இந்த ரூட்டு கூட நல்லாருக்கே என இதையே தொடர முடிவு செய்துவிட்டாராம் ஆன்ட்ரியா.

English summary
Actress Andrea was paid Rs 25 lakh for sing and dance a song in movie Bramman.
Please Wait while comments are loading...