»   »  நல்ல வேளை ஆண்ட்ரியா பயந்த மாதிரி நடக்கவில்லை

நல்ல வேளை ஆண்ட்ரியா பயந்த மாதிரி நடக்கவில்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil
இயக்குனருக்கு ஐஸ் வைத்த ஆண்ட்ரியா- வீடியோ

சென்னை: நல்ல வேளை நடிகை ஆண்ட்ரியா பயந்த மாதிரி நடக்கவில்லை.

தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கி வரும் வட சென்னை படத்தில் ஆண்ட்ரியாவும் உள்ளார். வட சென்னை படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் படம் குறித்து ஆண்ட்ரியா கூறியிருப்பதாவது,

 வெற்றிமாறன்

வெற்றிமாறன்

அழகு, டேட்ஸ் ஆகியவற்றை பார்த்து பல இயக்குனர்கள் நடிகைகளை தேர்வு செய்வார்கள். ஆனால் வெற்றிமாறனோ மிகவும் வித்தியாசமானவர். அவர் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் விதமே தனி.

 கதாபாத்திரம்

கதாபாத்திரம்

வெற்றிமாறன் தனது கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் யாரிடம் உள்ளது என்று பார்ப்பார். அதை கண்டுபிடித்துவிட்டால் அவர்களை தான் தனது படத்தில் நடிக்க வைப்பார். லுக்கெல்லாம் இரண்டாம் பட்சம்.

இல்லை

இல்லை

வெற்றிமாறன் போன்று பெரும்பாலான இயக்குனர்கள் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வது இல்லை. ஒரு கலைஞராக அவரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டும். பலநேரம் செட்டில் என்ன நடக்கிறது என்பதே புரியாது. ஆனால் தான் என்ன செய்கிறோம் என்பது அவருக்கு தெரியும்.

 பெண்

பெண்

வட சென்னை பெண்ணாக எப்படி நடிக்கப் போகிறோமோ என்று பயந்தேன். ஆனால் வெற்றிமாறனை முழுவதுமாக நம்பியதால் தற்போது அந்த பயம் இல்லை என்றார் ஆண்ட்ரியா.

 பாராட்டு

பாராட்டு

வட சென்னை படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் ஆண்ட்ரியாவா இது, ஆளே மாறிப்போயுள்ளார் என்று பாராட்டுகிறார்கள். ரசிகர்கள் ஆண்ட்ரியாவை வட சென்னை பெண்ணாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

Read more about: andrea vada chennai
English summary
A picture of Andrea from Vada Chennai is doing rounds on social media. Fans couldn't stop praising her after seeing the picture. Andrea is glad to be a part of Vetrimaran's Vada Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X