»   »  எத்தனையெத்தனை கிசுகிசுக்கள்... அலுப்பாய் இருக்கிறது! - ஆன்ட்ரியா

எத்தனையெத்தனை கிசுகிசுக்கள்... அலுப்பாய் இருக்கிறது! - ஆன்ட்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

உண்மை பொய் எதுவும் தெரியாமலேயே என்னைப் பற்றி ஏராளமான கிசுகிசுக்கள் வந்து கொண்டிருப்பது என்னை காயப்படுத்துகிறது என்கிறார் நடிகை ஆன்ட்ரியா.

முன்னணி நடிகையான ஆன்ட்ரியா பல திறமைகள் கொண்டவர். நல்ல பாடகி என பெயரெடுத்தவர்.

ஆனாலும் அவரைச் சுற்றி பரபரப்புக்கும் கிசுகிசுகளுக்கும் பஞ்சமில்லை. இப்போது 'இது நம்ம ஆளு', 'விஸ்வரூபம் 2' படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன. அவரது 'தரமணி'யும் வெளியாகத் தயாராக உள்ளதுய

கிசுகிசுக்கள்

கிசுகிசுக்கள்

ஆண்ட்ரியா பற்றி கிசுகிசுக்களும் தொடர்ந்து வருகின்றன. மலையாளத்தில் 'அன்னயும் ரசூலும்' என்ற படத்தில் பகத் பாசில் ஜோடியாக ஆண்ட்ரியா நடித்தார். அந்த படம் ரிலீசானதும் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக பகத் பாசில் வெளிப்படையாக அறிவித்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அனிருத்துடன்

அனிருத்துடன்

ஆண்ட்ரியாவோ யாரையும் காதலிக்கவில்லை என்று மறுத்தார். இசையமைப்பாளர் அனிருத்துடனும் இணைத்து பேசப்பட்டார். இருவரும் முத்தமிடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

தரமணியிலும்

தரமணியிலும்

‘தரமணி' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதும் நிறைய கிசுகிசுக்கள். தொடர்ந்து கமலுடன் நடிப்பது குறித்தும் பேச்சுகள் கிளம்பியுள்ளன. எனக்கு வசதியாக இருப்பதால்தான் என் படங்களில் ஆன்ட்ரியா தொடர்கிறார் என்று கமல் கூறியிருந்தார்.

ஆன்ட்ரியா பதில்

ஆன்ட்ரியா பதில்

இவை குறித்து ஆன்ட்ரியா கூறுகையில், "என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. அவர்களை எதிர்கொள்ள எனக்கு நேரம் இல்லை. பொறுமையும் இல்லை. உண்மை பொய் தெரியாமல் கிசுகிசுக்கள் மூலம் என்னை காயப்படுத்தினர். அவற்றை கண்டு கொள்வதில்லை.

மென்மையான கதைகள்

மென்மையான கதைகள்

வாழ்க்கையில் முக்கிய விஷயங்களில் மட்டுமே என் கவனத்தை செலுத்துகிறேன். மென்மையான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன். ‘இது நம்ம ஆளு' படம் அதுமாதிரியான கதை. படப்பிடிப்பு ஜாலியாக இருந்தது. கமலுடன் ‘விஸ்வரூபம் 2', ‘உத்தமவில்லன்' படங்களில் நடித்தது இனிய அனுபவம்," என்றார்.

English summary
Actress Andrea says that she never bother about gossips and always ignored them.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil