»   »  'வடசென்னை’யில் கணவனை இழந்த பெண்ணாக நடிக்கும் ஆண்ட்ரியா!

'வடசென்னை’யில் கணவனை இழந்த பெண்ணாக நடிக்கும் ஆண்ட்ரியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போது இருக்கும் தமிழ் நடிகைகளில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் துணிச்சல் உள்ள சில நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர்.

Andrea plays widow role

என்றென்றும் புன்னகையில் திமிர் பிடித்த பெண்ணாக கலக்கி இருப்பார். அவர் பாலியல் தொழிலாளியாக நடித்த ஒரு படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அதிகம் படம் ஒப்புக்கொள்ளாமல் செலக்டிவாக நடிக்கும் ஆண்ட்ரியா நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் படம் தரமணி. ரொம்ப நாளாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கும் இந்த படத்திலும் ஐடி துறையில் வேலை பார்க்கும் நவநாகரீக பெண்ணாக நடித்திருக்கிறார். படத்தில் ஆண்ட்ரியாவின் கேரக்டர் நிறைய சர்ச்சைகளை உண்டுபண்ணும் என்கிறார்கள்.

இந்நிலையில் தனுஷ் நடிக்க வெற்றி மாறன் இயக்கும் பெரிய படமான வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். விஜய்சேதுபதி சில நிமிடங்கள்தான் படத்தில் வருகிறார். ஆனால் ஆண்ட்ரியாவுக்கு படம் முழுக்க வரும் கேரக்டர். முக்கியமாக, விஜய் சேதுபதியின் கேரக்டர் கொல்லப்பட்ட பிறகு ஆண்ட்ரியாவின் பெர்ஃபார்மென்ஸ் பெரிதாகப் பேசப்படுமாம்.

English summary
Actress Andrea is playing a widow role in Dhanush's Vada Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil