»   »  'சிம்புவின் நடிப்புத் திறனை கண்டு நான் வியக்கேன்'- ஆன்ட்ரியா

'சிம்புவின் நடிப்புத் திறனை கண்டு நான் வியக்கேன்'- ஆன்ட்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒஸ்தி படத்தில் ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்யாவிடம், 'உன் அழகைக் கண்டு நான் வியக்கேன்...' என கமெண்ட் அடிப்பார் சிம்பு. இப்போது அது அப்படியே உல்டா. ஹீரோயின் ஆன்ட்ரியா, 'சிம்புவின் நடிப்புத் திறமையைப் பார்த்து வியப்பதாக' தெரிவித்துள்ளார்.

சிலம்பரசன் ஜோடியாக இது நம்ம ஆளு படத்தில் நடித்திருக்கிறார் ஆன்ட்ரியா. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள படம் இது.


Andrea praises Simbu's skills

சிம்புவுடன் இணைந்து நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்றும், இது நம்ம ஆளு திரைப்படம் தனக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறது என்றும் கூறுகிறார் ஆன்ட்ரியா.


இது நம்ம ஆளு அனுபவம் குறித்து அவர் கூறுகையில், "படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் அடுத்த நொடியே சிம்பு ஒரு நடிப்பு அசுரன் ஆகிவிடுவார். அவருடைய திறமை அபரிதமானது. ஒவ்வொரு காட்சியிலும் சிம்புவின் நடிப்பு திறனைக் கண்டு நான் வியந்து போகிறேன்.


எதார்த்தமான வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவை நிஜமாக்கி இருக்கிறது இது நம்ம ஆளு திரைப்படம். பொதுவாகவே வலுவிழந்த கதைகளில் முன்னணி கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம், எனக்கு கொஞ்சமும் கிடையாது. சிறிய வேடமாக இருந்தாலும் வலிமையான கதையம்சத்தில் நடிப்பதைத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். அந்த வகையில் இது நம்ம ஆளு திரைப்படம் எனக்கு பக்கபலமாக அமையும் என்று நம்புகிறேன்," என்றார்.

English summary
Actress Andrea has praised the acting skills of Simbu in Idhu Namma Aalu.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil