»   »  லிப்லாக் எல்லாம் ஒரு மேட்டரா? - 'நான் என்ன சின்னப்புள்ளையா' எனக் கேட்கும் ஆண்ட்ரியா

லிப்லாக் எல்லாம் ஒரு மேட்டரா? - 'நான் என்ன சின்னப்புள்ளையா' எனக் கேட்கும் ஆண்ட்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆண்ட்ரியா நடிப்பில் 'தரமணி', 'துப்பறிவாளன்' படங்களை அடுத்து வெளிவருகிறது 'அவள்' படம். இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த், தயாரித்து நடித்துள்ளார். சித்தார்த்தின் மனைவியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

படத்தில் ஒரு பாடல் காட்சியில் 7 லிப் லாக் முத்தக்காட்சிகள் இடம்பெற்றுள்ளனவாம். படம் முழுக்க 15 முத்தக் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Andrea said about aval liplock scenes

'சினிமாவில் முன்பெல்லாம் யதார்த்த வாழ்க்கையை அவ்வளவாகக் காட்டவில்லை. ஆனால் இப்போது சினிமா யதார்த்தங்களைக் காட்டுகிறது. அப்படித்தான் யதார்த்தத்தில் சகஜமாகிவிட்ட லிப் லாக் முத்தக் காட்சிகளைப் படத்தில் காட்டுகிறார்கள்.

நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி, லிப் லாக் சாதாரண விஷயம்தான். அதை ஏன் பெரிது படுத்துகிறார்கள். என்னை சித்தார்த் முத்தக் காட்சியில் வற்புறுத்தி நடிக்க வைத்தரா என்று கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது.

Andrea said about aval liplock scenes

வற்புறுத்தி நடிக்க வைப்பதற்கும், ஏமாற்றி நடிக்க வைப்பதற்கும் நான் என்ன சின்னப்புள்ளையா? லிப் லாக் முத்தமெல்லாம் இப்போது சர்வ சாதாரணம் அதைப் பெரிதுபடுத்தாதீர்கள் என 'அவள்' ப்ரஸ்மீட்டில் கூறியிருக்கிறார் ஆண்ட்ரியா.

English summary
Andrea's next film is 'She'. This film is to be full of 15 lip-lock kiss scenes of Siddharth and Andrea. Andrea said, "Lip-Lock kiss is a normal thing in real life and cinema."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil