எகிப்து பாலைவனத்தில் ஒட்டக சவாரி போன ஆன்டிரியா... வியந்து பார்க்கும் ரசிகர்கள்

சென்னை : தமிழ், மலையாள மொழி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆன்டிரியா. நடிகை, பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர் ஆன்டிரியா.

கெளதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஆன்டிரியா. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் லீட் ரோலில் நடித்துள்ளார்.

நிர்வாணமாக நடித்த ஆன்டிரியா

நிர்வாணமாக நடித்த ஆன்டிரியா

அரண்மனை 2 படத்தில் பேயாகவும் நடித்து அசத்தினார். இவர் நடித்த தரமணி, வடசென்னை போன்ற படங்கள் பெரும் விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றன. தற்போது மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஒரு சீனில் ஆன்டிரியா நிர்வாணமாகவும் நடித்துள்ளாராம்.

கைவசம் பல படங்கள்

கைவசம் பல படங்கள்

இதைத் தொடர்ந்து மாளிகை, நோ என்ட்ரி, கா, வட்டம், பாபி ஆன்டனியுடன் பெயரிடப்படாத படம் என பல படங்களில் நடித்து வருகிறார் ஆன்டிரியா. இதில் மாளிகை படத்தில் போலீஸ் ஆபீசர் ரோலில் நடித்துள்ளார் ஆன்டிரியா.

எகிப்து டூர்

எகிப்து டூர்

வழக்கமாக வித்தியாசமாகவும், கவர்ச்சியாகவும் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ஆன்டிரியா, தற்போது ஓய்விற்காக எகிப்திற்கு டூர் சென்றுள்ளார். எகிப்து டூரின் முதல் நாளில் தான் எங்கெல்லாம் சென்றோம் என்பதை ஃபோட்டோக்களுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஆன்டிரியா.

ஒட்டக சவாரி செய்த ஆன்டிரியா

ஒட்டக சவாரி செய்த ஆன்டிரியா

ப்ளூ ஜீன்ஸ் ஸ்கர்ட்டும், கருப்பு நிற கூலர் சட்டையும் அணிந்துள்ள ஆன்டிரியா, எகிப்தில் உலக அதிசயங்களில் ஒன்றாக பிரமிட்டை சுற்றி பார்க்க சென்றுள்ளார். தோளில் ஸ்டைலாக ஹேண்ட்பேக் அணிந்தபடி, பிரமிடுகள் அருகிலும், ஒட்டகம் மீது ஏறியும் ஆன்டிரியா போஸ் கொடுத்துள்ளார். ஆன்டிரியா வெளியிட்டுள்ள இந்த ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

வர்ணிக்கும் ரசிகர்கள்

வர்ணிக்கும் ரசிகர்கள்

சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்று ஆன்டிரியா, பிகினி ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றினார். தற்போது எகிப்து டூர் ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ஒரு அதிசயமே இன்னொரு அதிசயத்தை பார்க்க சென்றுள்ளதே என பார்த்திபன் ஸ்டைலில் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X