சபாஷ் சரியான போட்டி.. அனேகன் பட நடிகைகளின் டூ பீஸ் மோதல்.. மாலத்தீவில் கவர்ச்சி யுத்தம்!

சென்னை: நடிகை அமைரா தஸ்தூர், மாலத்தீவில் மினி பிகினி உடையில் கொடுத்த கவர்ச்சியான போஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தனுஷின் "அனேகன்" படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் படங்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அனேகன் படத்தில் வில்லியாக நடித்த ஐஸ்வர்யா தேவனும் தொடர்ந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற கவர்ச்சி போட்டோக்களை போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அமைரா தஸ்தூர், 2013ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான "இசாக்" மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர், 2015ஆம் ஆண்டு மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக "அனேகன்" திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Anegan heroines Amyra Dastur and Aishwarya Devan glam war at Maldives

"அனேகன்" படத்திற்குப் பிறகு, மீண்டும் பாலிவுட்டில் "மிஸ்டர் எக்ஸ்" படத்தில் நடித்தார். 2017ஆம் ஆண்டு ஜாக்கி சான் நடிப்பில் வெளியான சர்வதேச திரைப்படமான "குங்ஃபூ யோகா"விலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடிகை திஷா பதானியின் தோழியாக அமைரா தஸ்தூர் நடித்திருந்தார்.

அனேகன் பட நடிகைகளின் பிகினி போட்டி: ஒரு பக்கம் நடிகை வேதிகா க்ரீஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த பிகினி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கோலிவுட் ரசிகர்களுக்கு குளிர் ஜூரத்தை வரவைத்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் அனேகன் பட நடிகைகளான அமைரா தஸ்தூர் மற்றும் ஐஸ்வர்யா தேவன் பிகினி போட்டி நடத்தி வருகின்றனர்.

அமைரா தஸ்தூர் செம கூல்: அனேகன், குங்ஃபூ யோகா என பிரபலமானவர் அமைரா தஸ்தூர், அதன் பிறகு, தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் அமைரா தஸ்தூர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் "பஹீரா" படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அவர் ஒரு மனநல மருத்துவ மாணவியாக மிகவும் கவர்ச்சியாகத் தோன்றினார்.

மாலத்தீவில் டூ பீஸ் உடையில்: சம்மர் கடந்து மழை காலம் ஆரம்பித்த நிலையிலும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அமைரா தஸ்தூர் அங்கே எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. ரசிகர்கள் அவரது அழகைப் பாராட்டி, "அத்தனை அழகும் அம்சமா இருக்கே அமைரா" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் 3.5 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட அமைரா தஸ்தூர், தற்போது சில இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.

சபாஷ் சரியான போட்டி: இன்னொரு பக்கம் அனேகன் படத்தில் வில்லியாக நடித்து யோலோ பாடலில் அமைரா தஸ்தூர் உடன் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா தேவனும் தொடர்ந்து கண்களை பறிக்கும் கவர்ச்சி பிகினி போட்டோக்களில் தோன்றி லைக்குகளை குவித்து வருகிறார். மீண்டும் இருவரும் சேர்ந்து தனுஷ் உடன் ஒரு படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அமைரா தஸ்தூருக்கு பாலிவுட்டில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு சம்பாதித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X