»   »  பாரதி போய் அஞ்சலி ..!

பாரதி போய் அஞ்சலி ..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிளாமராக நடித்தால் புதுப் பட வாய்ப்பு கிடைக்கும் என்பார்கள். ஆனால் பாரதி விஷயத்தில் இது தலைகீழாகியுள்ளது. அம்முவாகிய நான் படத்தில் இவர் நடித்த கிளாமர் நடிப்பைக் கேள்விப்பட்டு புக் ஆன புதுப் படத்திலிருந்து பாரதியை நீக்கி விட்டார்களாம்.

பார்த்திபனுடன் இழைந்து, இழைந்து பாரதி நடித்து வரும் படம் அம்முவாகிய நான். விபச்சாரப் பெண்ணுக்குள் பிறக்கும் காதலைச் சொல்லியுள்ளனராம் இப்படத்தில்.

இப்படத்தில் நடிக்க பல நாயகிகளும் மறுத்து விட, கடைசியாக வலியக்க வந்து ஒப்புக் கொண்டவர் பாரதி. படம் முழுக்க பாரதியை விட அவரது கிளாமர்தான் அதிகம் நடித்துள்ளதாம்.

சில நாட்களுக்கு முன்பு அம்முவாகிய நான் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்களை படத்தின் பி.ஆர்.ஓ. வெளியிட்டார். அதைப் பார்த்ததும், ஆயுதம் செய்வோம் படத்தின் இயக்குநர் உதயன் பயந்து போய் விட்டார்.

அம்முவைப் பார்த்து ஆயுதம் ஏன் பயப்பட வேண்டும் என்று நினைக்கலாம். ஆயுதம் செய்வோம் படத்தின் நாயகியும் பாரதிதான். ஆயுதம் செய்வோம் படத்தின் நாயகி படு குடும்பப் பாங்கான பெண்ணாம். ஆனால் பாரதியின் தகதக கிளாமரைப் பார்த்து பயந்து போன உதயன், இந்த நிலையில் பாரதியை ஹீரோயினாக நடிக்க வைத்தால் படம் படுத்து விடும் என்று நினைத்தார்.

இதையடுத்து தீவிர ஆலோசனைக்குப் பின்னர் பாரதியை படத்திலிருந்து தூக்கி விட்டார். அவருக்குப் பதில் இப்போது அந்த கேரக்டரில் நடிப்பவர் அஞ்சலி.

அஞ்சலி ஏற்கனவே தமிழ் எம்.ஏ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவரது குடும்பப் பாங்கான முகம், ஆயுதம் செய்வோம் படத்தின் நாயகியாக்கி விட்டது.

சரி, ஆயுதம் செய்வோம் படத்தின் ஹீரோ யார் தெரியுமா, சுந்தர்.சி.தான். அவர் ஹீரோவாக நடிக்கும் 7வது படம் இது. உதயன், ஏற்கனவே விஜயகாந்த்தை வைத்து பேரரசு என்ற படத்தை இயக்கியவர். அவரது இரண்டாவது படம்தான் ஆயுதம் செய்வோம்.

ஆயுதத்தை பதமா தீட்டுங்க உதயன்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil