»   »  அஞ்சலி - விந்தியா!

அஞ்சலி - விந்தியா!

Subscribe to Oneindia Tamil

சுந்தர்.சி. நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கற்றது தமிழ் பட நாயகி அஞ்சலி இணைய, விந்தியா ஒத்தைப் பாட்டுக்கு குத்தாட்டம் போட உருவாகிறது ஆயுதம் செய்வோம்.

பிரமீட் சாய்மீரா நிறுவனம் தயாரிக்கும் படம் ஆயுதம் செய்வோம். திரையரங்க நிர்வாகத்திலும், விநியோகத்திலும் ஈடுபட்டு வரும் பிரமீட் சாய்மீரா நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இது.

பெரும் பொருட் செலவில் உருவாகவுள்ள இப்படத்தை உதயன் இயக்குகிறார். சுந்தர்.சி.தான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கற்றது தமிழ் நாயகி அஞ்சலி.

வன்முறை கூடாது என்பதைச் சொல்லும் படமாம் இது. படத் தலைப்பில் ஆயுதம் இருந்தாலும், அது கூடாது என்பதைத்தான் இந்தப் படத்தின் கதை சொல்லும் என்கிறார் உதயன். அன்புதான் உண்மையான ஆயுதம், அதை விட சிறந்த ஆயுதம் இல்லை என்பதை வலியுறுத்தும் இப்படத்தில் பல நல்ல கருத்துக்கள் இடம் பெறுவதாகவும் கூறுகிறார் உதயன்.

காமெடியை விவேக் பார்த்துக் கொள்கிறார். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி முக்கிய வேடம் ஏற்று இப்படத்தில் நடிக்கிறார். பேராசிரியர் கு.ஞானசம்பந்தனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் விந்தியா. ஐட்டம் பாட்டுக்கு இப்படத்தில் ஆடியுள்ளார் விந்தியா.

அன்பே சிவம் வரிசையில், அன்பே ஆயுதம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil