»   »  இதோ, இன்னொரு அனு

இதோ, இன்னொரு அனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏற்கனவே சூப்பர்டா படத்தின் மூலம் அறிமுகமான ஒரு அனு சினிமா திரைகளை நிரப்பிக் கொண்டிருக்கும் நிலையில்,இன்னொரு அனுவும் நடிக்க வந்திருக்கிறார்.

இந்த புதிய அனு, பழம் பெரும் நடிகை அஞ்சலி தேவியின் பேத்தி.

அமெரிக்காவில் படித்துவிட்டு, அப்படியே சில கம்யூனிட்டி ரேடியோக்களில் நிகழ்ச்சிகளை கம்பியரிங் செய்து கொண்டிருந்தஅனுவுக்கு திடீரென சினிமா ஆசை வந்துவிட பாட்டி அஞ்சலி தேவியிடம் ஓடி வந்துவிட்டார்.

அஞ்சலி தேவியும் விட்டுப் போன தனது சினிமா தொடர்புகளுக்கு உயிர் கொடுத்து பேத்திக்கு சினிமாவில் இடம் பிடிக்கதீவிரமாக களமிறங்கியிருக்கிறார். தனக்கு வாய்ப்புக்காகக் கூட இப்படி அலைந்திருக்க மாட்டார் அஞ்சலி தேவி.

அந்த அளவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய நதிகளை இணைக்கும் திட்ட அதிகாரி மாதிரிநாலாபக்கமும் அலை பாய்ந்து கொண்டிருக்கிறார். பழைய தயாரிப்பு நிறுவனங்களில் அஞ்சலி தேவி மீதான பெரும் மரியாதைகாரணமாக உடனடியாகவே அனுவுக்கு போட்டோ செஷன் நடத்தி முடித்துவிட்டு வாய்ப்பு குறித்து விரைவில் பதில் சொல்வதாய்கூறி அனுப்பியிருக்கிறார்கள்.

அனுவும் சும்மா இல்லை. தானாகவே பல இயக்குனர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டு வருகிறார். மேலும் பத்திரிக்கைகளில் தனதுபடத்தை வர வைப்பதிலும் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த முயற்சிகளால் அனுவுக்கு தமிழில் ஒரு படம் கிடைத்திருக்கிறது.

தமிழில் ஸ்டான்லி இயக்கப் போகும் படத்தில் ரவி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாயிருக்கிறார் அனு.

அடிப்படையில் ஆந்திரா குடும்பம் என்பதால் தெலுங்கு நன்றாகவே வருகிறது. சென்னையில் பாட்டி அஞ்சலி தேவியின் வீட்டில்வளர்ந்ததால் தமிழும் பிரச்சனையில்லை. அமெரிக்காவில் படித்ததால் ஆங்கிலத்தில் பிய்த்து உதறுகிறார்.

தமிழில் நடிக்கப் போவதில் பூரித்துப் போயிருக்கும் அனுவுக்கு கன்னடத்திலும் ஒரு படம் புக் ஆகிவிட்டது.

அபினந்தனா என்ற அந்தப் படத்தை இயக்கப் போவது தெலுங்குலகைச் சேர்ந்த ராமச்சந்திர ராவ். இவர் ஏற்கனவே சில கன்னடபடங்களையும் எடுத்துள்ளார். இதுவும் ஒரு தெலுங்கு படத்தின் ரீ மேக் தானாம்.

சமீபத்தில் அஞ்சலி தேவியே குத்துவிளக்கேற்றி வைத்து இந்தப் படத்தின் சூட்டிங்கை துவக்கி வைத்தார். பேத்தி மீது அம்புட்டுபாசம்.

இந்தப் படம் முடிவதற்கு முன்பே ஸ்டான்லியின் இயக்கத்தில் தமிழிலும் நடிக்க ஆரம்பித்துவிடுவேன் என்கிறார் அனு.

தான் நடிக்கும் முதல் படம் கன்னடமாக இருந்தாலும் தனது கனவெல்லாம் தமிழ்த் திரையுலகைச் சுற்றித் தான் என்கிறார்.

அனுவுக்கு டப்பு ஒரு பிரச்சனை இல்லை. சினிமா ஆர்வத்தால் தான் நடிக்க வந்திருக்கிறார். இதனால், சேலஞ்சிங்கான ரோல்கள்கிடைக்கும் தமிழுக்கே முதலிடம் தரப் போகிறாராம்.

நம் ஆட்கள் அனுவுக்கு நல்ல ரோலாகக் கொடுத்து வேலை வாங்கினால் சரி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil