அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து அசத்தும் நடிகை அஞ்சலி!

சென்னை : பாவக் கதைகள் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது நவரசா ஆந்தாலஜி திரைப்படத்திலும் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார்.

F1, F2 வெற்றிகளின் தொடர்ச்சியாக இப்போது உருவாகி வரும் F3ல் நடிகை அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வரும் அஞ்சலி இப்போது அந்தரத்தில் தொங்கியவாறு பதிவிட்டுள்ள அசத்தலான யோகா புகைப் படங்களை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

பாவக்கதைகள்

பாவக்கதைகள்

தமிழ் படங்களில் நாயகிகளை இரட்டைவேடங்களில் காண்பிப்பது மிக அரிது அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பாவக்கதைகள் திரைப்படத்தில் நடிகை அஞ்சலி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இதில் சில சர்ச்சைக்குரிய காட்சிகளிலும் நடித்து சர்ச்சையிலும் சிக்கினார்.

இராணுவ வீரராக

இராணுவ வீரராக

இப்பொழுது மேலும் ஒரு ஆந்தாலஜி படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் மணி ரத்னம் தயாரிப்பில் 9 முன்னணி இயக்குனர்களின் படைப்பில் உருவாகிவரும் நவரசா திரைப்படத்தில் சர்ஜன் இயக்கத்தில் "துணிந்தபின்" என்ற பகுதியில் நடித்துவருகிறார். இதில் நடிகர் அதர்வா இராணுவ வீரராக நடித்துள்ளார்.

லாக்டவுனுக்கு பிறகு

லாக்டவுனுக்கு பிறகு

தெலுங்கில் F1, F2 ஆகிய இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் இப்போது மூன்றாவது பாகம் உருவாகி வருகிறது இந்த பாகத்திலும் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் ஹீரோவாக நடிக்க நடிகை அஞ்சலி இதில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு பிறகு சமீபத்தில் தொடங்கியது.

துணிச்சலுடன் யோகா

துணிச்சலுடன் யோகா

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை துணிச்சலுடன் ஏற்று நடித்து பாராட்டுக்களைப் பெற்று வரும் இவர் சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அஞ்சலி இப்பொழுது அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்து அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வர அவை வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X