»   »  சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் அஞ்சலி

சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தமிழின் சிறந்த நாயகிகளில் ஒருவரான அஞ்சலி இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளின் காரணமாக தமிழ்த் திரையுலகில் இருந்து காணாமல் போனார். மீண்டும் மாப்ள சிங்கம், அப்பாடக்கரு மற்றும் இறைவி போன்ற படங்களில் தற்போது தமிழ் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் அறிமுகமான தெலுங்கு உலகில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தில் அஞ்சலியும் ஒரு நாயகியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Anjali Joined Auto Jaani Movie?

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150 வது படமான ஆட்டோ ஜானியை பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்க, சிரஞ்சீவியின் மகனும் டோலிவுட்டின் இளம் நாயகனுமான ராம் சரண் படத்தைத் தயாரிக்கிறார்.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் நமீதாவும் ஒரு நாயகி தான் என்று முன்பு தகவல்கள் வெளியாகின , தற்பொழுது அதில் அஞ்சலியும் ஒரு நாயகியாக நடிக்கிறார் என்று தெலுங்குலகில் கிசுகிசுக்கிறார்கள் . ஆட்டோ ஜானி படத்தின் முதல் பாகம் திகில் கலந்த சஸ்பென்ஸ் ஆக உருவாகி வருகிறதாம்.

English summary
Megastar Chiranjeevi’s 150th movie is titled Auto Jaani .The latest buzz is that actress Anjali could be one of the heroines of the movie
Please Wait while comments are loading...