»   »  மறுபடியும் மலையாளத்துக்குப் போகும் அஞ்சலி!

மறுபடியும் மலையாளத்துக்குப் போகும் அஞ்சலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : 'தரமணி' படத்தில் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அஞ்சலியின் நடிப்பும் சிறப்பாகப் பேசப்பட்டது. இப்போது வினு ஜோசப் இயக்கும் படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.

டார்க் காமெடி படம்

டார்க் காமெடி படம்

மலையாளத்தில் இயக்குநர் வினு ஜோசப் இயக்கத்தில் டார்க் காமெடி வகையறா படம் ஒன்று தயாராகவிருக்கிறது. மலையாளத்தில் சில வருடங்களாக வரிசையாக ரியாலிஸ்டிக் சட்டயர் வகை படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படமும் அப்படியானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோசாப்பூ

ரோசாப்பூ

வினு ஜோசப் இயக்கும் இந்தப் படத்திற்கு 'ரோசாப்பூ' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாக பிஜு மேனன் நடிக்கிறார். கதாநாயகியாக அஞ்சலி நடிக்கவிருக்கிறார். 'அங்காடித் தெரு', 'எங்கேயும் எப்போதும்' போன்ற யதார்த்தப் படங்களில் அஞ்சலி நடிப்பில் வெளுத்துக் கட்டுவார் என்பதால் அவரை நடிக்கவைக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.

 ஏழு வருசமாச்சு

ஏழு வருசமாச்சு

அஞ்சலி கடைசியாக மலையாளத்தில் 2011-ம் ஆண்டு 'பய்யன்ஸ்' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாகப் போகாததால் மல்லுவுட்டில் கண்டுகொள்ளப்படாதவர் இப்போது ரீ-என்ட்ரி தரவிருக்கிறார்.

 இன்னொரு ஆச்சரியம்

இன்னொரு ஆச்சரியம்

"இந்தப் படத்தில் 143 கேரக்டர்கள் வர இருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டரும் முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும். படத்தில் அனைவருக்கும் டயலாக்குகளும் இருக்கின்றன. எனவே, நடிக்க வைப்பதற்காக ஆட்களைத் தேடுவதே பெரிய வேலையாக இருக்கிறது." என இயக்குநர் வினு ஜோசப் தெரிவித்துள்ளார்.

English summary
Anjali will make her comeback in Malluwood. She was committed in a movie titled Rosapoo with Biju menon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X