»   »  மனதிற்கு பிடித்தவரை பார்த்துட்டேன், ஆனால் திருமணம் செய்யத் தோனவில்லை: அஞ்சலி

மனதிற்கு பிடித்தவரை பார்த்துட்டேன், ஆனால் திருமணம் செய்யத் தோனவில்லை: அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனது மனதிற்கு பிடித்தவரை பார்த்துவிட்டதாகவும் ஆனால் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இன்னும் வரவில்லை என்றும் நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலியும், நடிகர் ஜெய்யும் காதலிப்பதாக பல காலமாக கூறப்படுகிறது. சித்தி பிரச்சனையால் குழம்பிப் போயிருந்த அஞ்சலி தற்போது தெளிவாகிவிட்டார்.

ஜெய்யும், அஞ்சலியும் காதலித்தாலும் அதை ஒப்புக்கொள்வது இல்லை.

தோசை

தோசை

இயக்குனர் வெங்கட் பிரபு விடுத்த தோசை சவாலை ஏற்று ஜெய் அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்தார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஜெய்யும், அஞ்சலியும் லிவ் இன் முறைப்படியா வாழ்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

கணவர்

கணவர்

எனக்கு கணவராக வருகிறவர் அழகானவராக, அன்பானவராக, நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும். குறிப்பாக என்னை ராணி மாதிரி வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

என் மனதிற்கு பிடித்தவரை பார்த்துவிட்டேன். ஆனால் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இன்னும் வரவில்லை என அஞ்சலி கூறியுள்ளார்.

சித்தி

சித்தி

வீட்டுக்கு வீடு பிரச்சனை உண்டு. பிரச்சனைகளை மட்டுமே பார்க்க முடியுமா, அதை தாண்டி வர வேண்டும். நான் பழைய விஷயங்களை மறந்துவிட்டு நிம்மதியாக உள்ளேன் என சித்தியுடனான பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார் அஞ்சலி.

English summary
Actress Anjali said that she has met her Mr. Right but doesn't feel like getting married to him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil