»   »  ஒன்னு இல்ல இரண்டு: ரஜினியின் காலா படத்தில் 'லேடி' தனுஷ்

ஒன்னு இல்ல இரண்டு: ரஜினியின் காலா படத்தில் 'லேடி' தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரஜினிகாந்தின் காலா படத்தில் தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை அஞ்சலி பாட்டிலும் நடிக்கிறார்.

பா. ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் படத்திற்கு காலா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.

தலைப்பை அறிவித்த கையோடு ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது.

 ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். இந்நிலையில் தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை அஞ்சலி பாட்டிலையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அஞ்சலி

சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடிக்க உள்ளதை அஞ்சலி பாட்டிலே ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நா பங்காரு தல்லி தெலுங்கு படம், பைன்டிங் ஃபேனி, மிர்சியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி.

 முக்கிய கதாபாத்திரம்

முக்கிய கதாபாத்திரம்

காலா பட தயாரிப்பாளர் தனுஷை போன்றே கொடுத்த கேரக்டரை நச்சுன்னு நடிப்பதற்கு பெயர் போன அஞ்சலிக்கு காலா படத்தில் முக்கிய கதாபாத்திரமாம். ஹூமாவுக்கும், அஞ்சலிக்கும் சரிசமமான முக்கியத்துவம் அளிக்கப்படுமாம்.

காலா

காலா

சிறுவனாக இருக்கும்போது வீட்டை விட்டு வெயேறி மும்பை வரும் காலா பின்னர் தாராவி பகுதியின் டான் ஆகிறார். கபாலியில் மலேசிய தமிழர்களின் வாழ்க்கையை காட்டிய ரஞ்சித் இந்த படத்தில் தாராவியில் வசிக்கும் நெல்லை மக்களின் வாழ்க்கையை காட்ட உள்ளார் என்று கூறப்படுகிறது.

English summary
National award winning Bollywood actress Anjali Patil is set to play an important role in Rajinikanth's upcoming movie Kaala to be directed by Pa. Ranjith.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil