»   »  குண்டா இருக்கிறதா சொன்னாங்க... 8 கிலோ எடை குறைச்சேன்! - நடிகை அஞ்சலி

குண்டா இருக்கிறதா சொன்னாங்க... 8 கிலோ எடை குறைச்சேன்! - நடிகை அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஞ்சலி ஒரு வழியாக தமிழுக்கு திரும்பிவிட்டார் முழு நேர நடிகையாக. முன்பெல்லாம் சென்னைக்கு வரலாமா வேண்டாமா என கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தவர், இப்போது பிரஸ் மீட்டுக்கு வந்து சகஜமாக செய்தியாளர்களைச் சந்திக்கிறார். ஜாலியாக கமெண்ட் அடித்தபடி பேட்டிகளும் கொடுக்கிறார்.

சமீபத்தில் மாப்ள சிங்கம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார் அஞ்சலி.

சௌகரியமான ஹீரோ விமல்

சௌகரியமான ஹீரோ விமல்

அப்போது அவர் படம் குறித்தும் தனது அனுபவங்கள் குறித்தும் கூறுகையில், "விமல் எனக்கு நீண்டகால நண்பர். அவரை எனக்கு ரொம்ப நாட்களாக தெரியும். பழகுவதற்கு இனியவர். படப்பிடிப்பின்போது நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பார். அவருடன் நடிப்பதற்கு சௌகரியமாக இருக்கும். என்னைப் புரிந்துகொண்ட கதாநாயகன், விமல். அதனால்தான், அவருடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறேன்.

நயன்தாராவுக்குப் போட்டியா?

நயன்தாராவுக்குப் போட்டியா?

என்னை நயன்தாராவுக்கு போட்டியாக தயாரிப்பாளர்கள் உருவாக்குகிறார்கள் என்று பேசப்படுவதில் எனக்கு வருத்தம் எதுவும் இல்லை, சந்தோஷம்தான். போட்டி இருந்தால்தான், ஆரோக்கியமாக இருக்கும்.

நிறைய படங்கள்

நிறைய படங்கள்

எனக்கு நிறைய படங்கள் ஒப்பந்தமாவது உண்மைதான். அவற்றில் சிறந்த கதையம்சமும், நல்ல கதாபாத்திரங்களும் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். தமிழில் அடுத்து இறைவி படம் வெளியாகவிருக்கிறது.

8 கிலோ குறைத்தேன்

8 கிலோ குறைத்தேன்

நான் நடித்த சில படங்களில் குண்டாக இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். எனவே உடல் எடையைக் குறைக்க தீவிர முயற்சி செய்துவருகிறேன். இதுவரை 6லிருந்து 8 கிலோ வரை எடையை குறைத்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் மெலியவேண்டும்.

பேய் வேடம்

பேய் வேடம்

'கீதாஞ்சலி' என்ற தெலுங்குப் படத்தில் நான் பேய் வேடத்தில் நடித்தேன். அது ஒரு புது அனுபவமாக இருந்தது. நிஜ வாழ்க்கையில், நான் பேய்க்கு பயப்பட மாட்டேன்.

காண்பது பொய்

காண்பது பொய்

தமிழில் இப்போது இறைவி, பேரன்பு, தரமணி, காண்பது பொய் ஆகிய படங்களில் நடிக்கிறேன். இதில் காண்பது பொய், திகில் படம். ஆனால் பேய் படம் அல்ல. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்," என்றார் அஞ்சலி.

English summary
Actress Anjali says that she has reduced her weight 6 - 8 kgs recently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil