»   »  ஷூட்டிங்கிற்கு லேட்டாக வந்த அஞ்சலி.. அதிரடியாக ஹீரோயினை மாற்றிய படக்குழு!

ஷூட்டிங்கிற்கு லேட்டாக வந்த அஞ்சலி.. அதிரடியாக ஹீரோயினை மாற்றிய படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் நடிகை அஞ்சலி, கன்னட நடிகர் தர்ஷன் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வரும் அஞ்சலி, கன்னடத் திரையுலகின் சூப்பர் ஹிட் நடிகரான தர்ஷன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

சக்கரவர்த்தி என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் பகுதியில் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் தர்ஷன்-அஞ்சலி காட்சிகளுடன் படத்தைத் தொடங்க படக்குழு திட்டமிட்டது.

Anjali Removed From Darshan Film

இதனால் இயக்குநர் தொடங்கி மற்ற தொழில்நுட்பக் குழுவினர் வரை அனைவரும் வந்து அஞ்சலிக்காக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பலமணி நேரங்கள் தாமதமாக அஞ்சலி படப்பிடிப்பிற்கு வந்தார்.

இதனால் முதல்நாளே தாமதமாக வரும் அஞ்சலி இப்படித் தொடர்ந்து தாமதமாக வந்தால் நமக்குத்தான் நஷ்டம் என்று நினைத்த படக்குழு, அவரை சக்கரவர்த்தி படத்திலிருந்து நீக்குவதாக அறிவித்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்திலிருந்தும் அவரை வெளியேற்றி விட்டனர். தற்போது அஞ்சலிக்குப் பதிலாக தீபா சன்னிதியை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் படத்தில் தீபா சன்னிதி நாயகியாக நடித்திருந்தார்.

English summary
Sources said Anjali Removed From Darshan's New Film.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil