»   »  அஞ்சலி என்ன திருமணத்தை பற்றி இப்படி சொல்லிட்டாப்ல!

அஞ்சலி என்ன திருமணத்தை பற்றி இப்படி சொல்லிட்டாப்ல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமண திட்டமே இல்லை என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலியும், நடிகர் ஜெய்யும் காதலித்து வருவதாக பல காலமாக பேசப்படுகிறது. அண்மையில் ஜெய் அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.

அதை பார்த்தவர்கள் அவர்கள் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக பேசத் துவங்கினர்.

பலூன்

ஜெய்யின் பலூன் படத்தில் அஞ்சலி நடித்துள்ளார். தனது காட்சிகளை முடித்த பிறகு அஞ்சலி அங்கிருந்து கிளம்ப ஜெய் ட்விட்டரில் ஃபீல் பண்ணினார். அஞ்சு உன்னை மிஸ் பண்ணுவோம் என ட்வீட்டினார் ஜெய்.

அஞ்சலி

அஞ்சலி

அஞ்சலி தற்போது கோலிவுட்டில் ரொம்பவே பிசியாக உள்ளார். படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துவதாக அஞ்சலி தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க விரும்பவில்லை. சிறந்த படங்களில் நடித்து என் கதாபாத்திரம் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் அஞ்சலி.

திருமணம்

திருமணம்

தற்போது நான் என் கெரியரில் கவனம் செலுத்துகிறேன். என் கை நிறைய படங்கள் உள்ளன. எனக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை. அப்படி ஏதாவது நடந்தால் நிச்சயம் தெரிவிக்கிறேன். தற்போது என் சகோதரருக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறோம் என்கிறார் அஞ்சலி.

English summary
Actress Anjali said that she doesn't have marriage plans and if something happens she will inform everyone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil