For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அஃகு இயக்குநர் மாமணியின் அடுத்த படம் கானகம்

  By Mayura Akilan
  |

  சர்வதேச தரத்திற்கு இணையாக வெளிவந்து பத்திரிக்கைகளாலும் ரசிகர்களாலும் பாரட்டப்பட்ட படமான அஃகு படத்தை இயக்கிய மாமணியின் அடுத்த படைப்பு

  "கானகம்"ஒரே நாளில் நடக்கும் ஆக்‌ஷன் மற்றும் காதல் கலந்த கதை கானகம்.

  இந்தியாவின் அழகான மற்றும் ரசிகர்கள் இதுவரை கண்டிராத பிரமாண்டமான தேசிய நெடுஞ்சாலைகளில்படமாக்கப்பட்டுள்ளன.படத்தின் இரண்டாவது பகுதி முழுவதும் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

  100 ஆண்டுகால சினிமா வரலாற்றில் உலகத் தரத்திற்கு இணையாக மிகவும் அதி நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி புதுமையான யுக்திகளைக் கையாண்டு கானகம் படம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

  அறிமுக நாயகன் நாயகி

  அறிமுக நாயகன் நாயகி

  இப்படத்தில் கதாநாயகனாக கிருஷ்ணதேவ் மற்றும் கதாநாயகியாக அஞ்சனா அறிமுகமாகிறார்கள். அறிமுக வில்லன் அமீர், சங்கர் கணேஷ் மகன் ஸ்ரீ ஆகியோருடன், ஜீ.வி.பிலிம்ஸ் மற்றும் ஏ.வி.ஆர் டாக்கீஸ் தயாரிப்பாளர் A.வெங்கட்ரமணி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

  விஞ்ஞானியாக அனுஹாசன்

  விஞ்ஞானியாக அனுஹாசன்

  அடர்ந்த வனப்பகுதியில் நடக்கும் திரில்லர் கதைதான் கானகம். இப்படத்தில் விஞ்ஞானியாக நடிக்கும் அனுஹாசன் லண்டனில் இருந்து வந்து நடித்து கொடுத்துவிட்டு போனதாக கூறினார் இயக்குநர் மாமணி. இதற்காக எந்த வித சம்பளமும் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார். இவர்களுடன்,ராம், ரவி பிரகாசம், உமா பத்மநாபன், மீரா கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

  கிராபிக்ஸ் சிறுத்தை

  கிராபிக்ஸ் சிறுத்தை

  இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக Life of Pi படத்தில் உருவாக்கப் பட்ட கிராபிக்ஸ் புலியின் அறிமுகக் காட்சிக்குச் சவால் விடத்தக்க அளவிற்கு இதிலும் சிறுத்தையை உருவாக்கி அதன் அறிமுகக் காட்சியில் மிரட்டியிருக்கிறார்கள்.

  மேலும் அதி நவீன தொழில் நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்ட சிறுத்தை சம்பந்தப்பட்ட கம்யூட்டர் கிராஃபிக்ஸ் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களுக்குப் புது அனுபவத்தைத் தரும் என்கிறது கானகம் படக்குழு.

  பிரம்மாண்ட சாலைகள்

  பிரம்மாண்ட சாலைகள்

  பாடல்காட்சிகள்,சண்டைக்காட்சிகள், மற்றும் சேசிங் எனப்படும் அதிவேகமான வாகனத் துரத்தல்கள் போன்றவை நிறைந்த முற்பகுதி இந்தியாவின் அழகான மற்றும் ரசிகர்கள் இதுவரை கண்டிராத பிரமாண்டமான தேசிய நெடுஞ்சாலைகளில்படமாக்கப்பட்டுள்ளன.

  அடர்ந்த காடுகள்

  அடர்ந்த காடுகள்

  படத்தின் இரண்டாவது பகுதி முழுவதும் அடர்ந்த காடுகளில் முற்பகுதியில் காட்டப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் சம்பந்தப் பட்டக் காட்சிகளானாலும் சரி இரண்டாவது பகுதியில் காட்டப்படும் அடர்ந்த காடுகளானாலும் சரி

  ரசிகர்களுக்கு அங்கேயே செல்வது போன்ற உணர்வு ஏற்படும் என்கிறார் படத்தின் இயக்குநர்.

  தத்ரூபமான காட்சிகள்

  தத்ரூபமான காட்சிகள்

  கானகம் படத்தில் வரும் முற்றிலும் புதிய மற்றும் தத்ரூபமான காட்சிகளை சென்னை, ஹைதராபாத், கேரளா , கர்நாடகா மற்றும் இந்தியாவின் முக்கிய மற்றும் அகலமான தேசிய நெடுஞ்சாலைகளிலும் தலக்கோணம் , அச்சன்கோயில் ,பிச்சாவரம் போன்ற அடர்ந்த காடுகளிலும் படமாக்கப்பட்டிருக்கின்றன.

  படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

  படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

  அஃகு படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீராம், கானகம் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. தணிக்கை அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்பட்ட இத்திரைப்படத்துக்கு "U " சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது .

  தொழில் நுட்பக் கலைஞர்கள்

  தொழில் நுட்பக் கலைஞர்கள்

  கானகம் படத்தின் எழுத்து- இயக்கம் - தயாரிப்பு : மாமணி, ஒளிப்பதிவு : ஷியாம், இசை : ஸ்ரீராம்,எடிட்டிங் : மகா விஷ்ணு,ஆக்ஷன் : பவர் ஃபாஸ்ட்,கலை : SS மூர்த்தி,மக்கள் தொடர்பு : S செல்வரகு, ஆன்லைன் நெட் ஒர்க் நிறுவனத்திற்காக தயாதித்துள்ளார் மாமணி.

  English summary
  Anu Haasan who became more prominent through television shows than her stint in films is back to donning grease paint for a movie titled Kaanagam. A few years back she was seen as a bomb squad officer in a film Akku which was directed by Maamani. The film which has former airhostess Anjana and Krishnadev debuting as the lead pair is said to be a visual extravaganza and action sequences were extensively shot in the highways of Chennai, Hyderabad, Kolkata and Mumbai. Sriram has given the music.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X