»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை அஞ்சு, பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் அவரது கால் எலும்பு முறிந்தது.

உதிரிப்பூக்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அஞ்சு. அவர் கேளடிகண்மணி உள்பட பல படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்தவர்.

தற்போது சினிமா பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் டிவி தொடர்களில் நடித்துவருகிறார். ராதிகாவின் சித்தி தொடரில் அவர் மனநோயாளியாகவும், தீபம்தொடரிலும் அவர் நடித்து வருகிறார்.

இந் நிலையில் சென்னை, ஆழ்வார்திருநகரில் உள்ள வீட்டில் பாத்ரூமில் வழுக்கிவிழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அஞ்சு அழைத்துச் செல்லப்பட்டார்.அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அஞ்சுவின் வலது கால் எலும்பு முறிந்துவிட்டதாகக் கூறினர்.

உடனே அதற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் வீட்டில் ஓய்வுஎடுத்துவருகிறார். அஞ்சுவின் கால் எலும்பு முறிந்ததால், அவர் நடித்து வந்த டிவிதொடர்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...