»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தமிழுக்கு இதோ வருகிறார்.. அதோ வருகிறார் என்று பேசப்பட்டுக் கொண்டிருந்த தெலுங்கு திரையுலக கவர்ச்சிப்புயல் அங்கிதா ஒரு வழியாய் கோடம்பாக்கத்துக்குள் வலது காலை எடுத்து வைத்துவிட்டார்.

தெலுங்கில் வெளியான சின்ஹாத்ரி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதையடுத்து அதில் நடித்த அங்கீதாவும் உச்சிக்குப்போனார்.

அடுத்தடுத்து தனது ஆட்டல்களால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்த அங்கிதாவை தமிழுக்குக் கொண்டு வரும்முயற்சிகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கின.

சிம்ஹாத்ரியை தமிழில் எடுக்கத் திட்டமிட்டார்கள். விக்ரம் ஹீரோ. ஜோடிகளாக அங்கிதா மற்றும் பூமிகாஎன்றார்கள்.

ஆனால், விக்ரம் வேறு படங்களில் பிசியாகிவிட்டதால் இப்போதைக்கு இந்த ரீமேக் தள்ளிவைக்கப்பட்டுவிட்டது.


இந் நிலையில் அங்கிதாவை சுந்தர்.சி தமிழுக்கு இழுத்து வந்துவிட்டார்.

நெஞ்சைத் தொடும் கதை, விறுவிறுப்பான திரைக்கதை என எப்போதும் சிரமப்படுவதில்லை சுந்தர்.சி. தன் பணிரசிகர்களை சிரிக்க வைப்பதே என்றளவில் திருப்தியடைந்து விடுபவர்.

போட்ட முதலுக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல்படம் ஓடும் என்ற நம்பிக்கை வினியோகஸ்தர்களுக்கு இவர் படங்களின் மேல் இருப்பதால், எதாவது ஒரு படம்சுந்தர் கையில் இருந்து கொண்டே இருக்கிறது.

இப்போது இவர் இயக்கி வரும் படம் தகதிமிதா. இதில் கதாநாயகனாக யுவகிருஷ்ணா என்ற புதுமுகம் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாகத் தான் அங்கிதாவைக் கொண்டு வந்துள்ளார்.
மேலும் இதில் சின்னவீடா வரட்டுமாதேஜாஸ்ரீயும் இருக்கிறார்.

படத்தில் 8 பாடல்களை வைத்து, அதற்கு குலுக்கலாட்டம் போடுவதில் இருவருக்கும் போட்டியே வைத்திருக்கிறார்சுந்தர்.சி.

இருவருமே ஒருவரை ஒருவர் விஞ்சி ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

விசாகப்பட்டினம், அரக்குவேலி ஆகிய இடங்களில் படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil