»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அன்ஷூ அம்பானி. இதில் அம்பானியை வெட்டிவிட்டு அன்ஷூ என்ற பெயரில் அறிமுகமாகிறார் இந்த அழகுப்புயல்.

பிறந்தது, வளர்ந்தது எல்லாம் லண்டனில் தானாம். தமிழ் படத்துக்குப் பின் பிரஷாந்துக்கு அடுத்தடுத்து எந்தப்படமும் கை கொடுக்காததால் தியாகராஜனே கோதாவில் இறங்கி கை காசைப் போட்டு எடுத்தும் ஜெய் படத்தில்ஹீரோயினாக அன்ஷூ அறிமுகமாகிறார்.

ஆஸ்திரேலியா, மலேசியா, ஹாலந்த், நைஜீரியா என பறந்து, பறந்து போய் படப் பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

முதலில் ஐஸ்வர்யா ராய் என்றார்கள், பின்னர் ஸ்னேகா என்றார்கள்.

கடைசியில் சிம்ரன் வரை சொல்லிவிட்டுஎல்லோரையும் விட்டுவிட்டு அன்ஷூவைப் பிடித்து படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் தியாகராஜன்.

நடிப்பு வருகிறதோ இல்லையோ நம் ஊர் ரெகுலர் கதாநாயகிகளைவிட பல மடங்கு கவர்ச்சிக்கு ரெடியாகஇருக்கிறார் அன்ஷூ.

என்ன உடை கொடுத்தாலும் பிரச்சனை பண்ணாமல் மாட்டிக் கொண்டு வந்து அழகைவழியவிட்டு நிற்கிறார்.

முழுக்க முழுக்க கிளாமருக்குத் தான் என்று சொல்லித் தான் புக் செய்தார்களாம்.

எப்படியும் நடிக்கத் தயார் எனவாக்கு தந்தேன்.

தந்ததைக் காப்பாற்றுவேன். கவர்ச்சிப் போட்டிக்கு யாருடனும் மோதத் தயார் என்கிறார் அன்ஷூ.

வேறு எந்த நடிகையாவது தயாரா இருந்தா மோதலாம்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil