»   »  கார்த்தியுடன் ஆண்ட்ரியா!

கார்த்தியுடன் ஆண்ட்ரியா!

Subscribe to Oneindia Tamil

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருடன் ஜோடி போட்ட ஆண்ட்ரியா, அடுத்து கார்த்தியுடன் ஜோடி சேருகிறார்.

இயக்குநர் கெளதம் மேனனின் நீண்ட நாள் தோழிதான் ஆண்ட்ரியா. கெளதம் மேனன் விளம்பரப் படங்களை இயக்கிய காலம் முதலே இருவரும் நண்பர்கள்.

அந்த நட்பு காரணமாகவே பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்க கெளதம் கூப்பிட்டபோது ஒத்துக் கொண்டு நடித்தார் ஆண்ட்ரியா.

ஆனால் அதன் பின்னர் பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தபோதும், அதை ஏற்க மறுத்தார் ஆண்ட்ரியா. ஏன் என்று கேட்டவர்களுக்கு, கெளதம் கேட்டுக் கொண்டதால் நடித்தேன், மற்றபடி தீவிரமாக நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றார்.

இப்படி வந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறி வந்த ஆண்ட்ரியா இப்போது செல்வராகவன் இயக்கத்தில் பருத்தி வீரன் கார்த்தியுடன் ஜோடி சேர ஒத்துக் கொண்டுள்ளார்.

கெளதமுக்காக மட்டுமே நடித்தேன் என்று கூறிய ஆண்ட்ரியா இப்போது செல்வராகவன் படத்தில் மட்டும் நடிக்க முன்வந்தது ஏன் என்று தெரியாமல் கோலிவுட் ஆட்கள் சிண்டைப் பிடித்துக் குழம்பிக் கொண்டுள்ளனர்.

கார்த்தி, சந்தியாவை வைத்து இது மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை அறிவித்தார் செல்வராகவன். பின்னர் திடீரென படத்தின் பெயரை ஆயிரத்தில் ஒருவன் என்று மாற்றி விட்டார். அத்தோடு சந்தியாவையும் தூக்கி விட்டார்.

அதற்குப் பதிலாக ரீமா சென் நாயகியாக அறிவிக்கப்பட்டார். இப்போது ஆண்ட்ரியாவும் ஒரு ஹீரோயினாக படத்தில் இடம் பெறுகிறார். அதாவது படத்தில் கார்த்திக்கு இரண்டு ஜோடிகள்.

நடிக்க வந்த இரண்டாவது படத்திலேயே இரட்டை நாயகிகளுடன் ஜோடி போடும் அதிர்ஷ்டம் கார்த்தியைத் தேடி வந்துள்ளது. நாயகிகள் ரெடியாகி விட்டதால் விரைவில் ஷூட்டிங் கிளம்பவுள்ளார் செல்வராகவன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil