Don't Miss!
- Automobiles
ரொம்ப பழசு போல தெரிஞ்சாலும் உடனே புதுசுபோல மாத்திடலாம்... வெது வெதுவெனு தண்ணி, சோப்பு கரைசலே போதும்!
- Finance
Budget 2023:கிரிப்டோ வரி தொடங்கி மசோதா வரையில் அறிவிப்புகள் வருமா..முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு!
- Sports
நியூசியை ஓயிட்வாஷ் செய்த இந்தியா.. 3வது ஒருநாள் போட்டியில் அபாரம்.. ஐசிசி நம்பர் 1 அணியானது இந்தியா
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- News
கிளம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் வரை.. வருகிறது சென்னை மெட்ரோ! பிரஷரே இல்லாமல் ஜாலியாக போகலாம்
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
காந்த கண்ணழகிக்கு ஹாட் லிப் லாக்.. வைரலாகும் அனு இமானுவேல், சர்வானந்த் முத்த வீடியோ!
ஹைதராபாத்: நம்ம வீட்டுப் பிள்ளை ஹீரோயின் அனு இமானுவேலுக்கு நடிகர் சர்வானந்த் ஹாட் லிப் லாக் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து இளம் ரசிகைகளை தன் பக்கம் ஈர்த்த தெலுங்கு நடிகர் சர்வானந்த் நடிப்பில் மகா சமுத்திரம் எனும் புதிய படம் உருவாகி உள்ளது.
நகைச்சுவை
மன்னன்
நாகேஷ்
பிறந்த
நாள்
இன்று…
ஸ்பெஷல்
ரவுண்டப்
!
சர்வானந்த் மற்றும் சித்தார்த் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் சர்வானந்துக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார்.

எங்கேயும் எப்போதும்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் சரவணன் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் எங்கேயும் எப்போதும். இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் கோர விபத்தில் சிக்கித் தவிப்பவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் கதையாக உருவான அந்த படத்தில் ஜெய், அஞ்சலி, அனன்யாவுடன் நடிகர் சர்வானந்த் இணைந்து நடித்து இருப்பார்

சிவகார்த்திகேயனின் பார்ட்னர்
மலையாள நடிகையான அனு இமானுவேல் தமிழில் துப்பறிவாளன் படத்தில் அறிமுகமானார். ஆனால், ரசிகர்கள் மத்தியில் காந்த கண்ணழகியாகவும் சிவகார்த்திகேயனின் பார்ட்னராகவும் பிரபலமானது நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் தான். தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் அனு இமானுவேல் நடிப்பில் உருவாகி உள்ள மகா சமுத்திரம் படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

மகா சமுத்திரம்
இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் சர்வானந்த், சித்தார்த், அதிதி ராவ் மற்றும் அனு இமானுவேல் நடிப்பில் உருவாகி உள்ள மகா சமுத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்த படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மீண்டும் சித்தார்த்
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் டோலிவுட்டில் மிரட்ட காத்திருக்கிறார் நடிகர் சித்தார்த். ஆக்ஷன் பேக்ட் மகா சமுத்திரம் டிரைலரில் சர்வானந்த் உடன் சித்தார்த் மோதும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை தெலுங்கில் கொடுத்துள்ள சித்தார்த் இந்த படத்திற்கு பிறகு மீண்டும் டோலிவுட்டில் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிப் லாக்
சமீபத்தில் வெளியான மகா சமுத்திரம் டிரைலர் 7 மில்லியன் பார்வைகளை நெருங்கி உள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள அத்தனை ஆக்ஷன் காட்சிகளுக்கு இடையில் உள்ள சர்வானந்த் மற்றும் அனு இமானுவேல் லிப் லாக் காட்சியை ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

பக்கா கெமிஸ்ட்ரி
மேலும், சர்வானந்த் மற்றும் அனு இமானுவேலுக்கு இடையே சூப்பரான கெமிஸ்ட்ரி இருப்பதாகவும் காதல், ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகி உள்ள மகா சமுத்திரம் வரும் அக்டோபர் 14ம் தேதி ஆயுத பூஜை ரிலீசாக உள்ள நிலையில், மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.