அந்தக் காலம் .. அது அது.. அனு இம்மானுவேல் காலம்.. டிரெண்டிங் போட்டோஸ்!
சென்னை : நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த அனு இமானுவேல் அசர வைக்கும் புது போட்டோசூட்டை பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நாயகிகளில் ஒருவர் தான் அனு இமானுவேல்.இவர் தனது இணைய ரசிகர்களுக்காக சீரானஇடைவெளியில் கவர்ச்சி மிகுந்த அழகான போட்டோக்களை பதிவிடுவது வழக்கமான விசயம் .

அனு இமானுவேல் தற்போது 80களின் படங்களில் மற்றும் பாடல்களில் வரும் நாயகிகள் போன்ற உடை அலங்காரத்துடன் அசத்தலான போட்டோசூட்டை நடத்தியிருக்கிறார். இந்த போடோக்கள் தற்போது தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இருக்கிறார் .

இந்த போடோக்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மலைத்து போய் இருக்கின்றனர். அனுவா இது என்பது போலும் பல ரசிகர்கள் வாயை பிளந்து ஸ்மைலிகளுடன் அனுவின் கமெண்ட் பாக்ஸை நிரப்பி உள்ளனர். அனு இந்த புகைப்படங்களில் அப்படியே 80களின் நாயகியை போல் உள்ளார் என்றும் கூறியுள்ளனர். அனு இயல்பாக மூக்குத்தி அணிபவர் இதனாலே இவர் இந்த போட்டோக்களில் அப்படியே எளிதில் செட்டாகிவிட்டார் .

அனு கடைசியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்து இருந்தார்.இந்த படத்திற்கு முன் சய்லஜா ரெட்டி அல்லுடு என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார். அனு இமானுவேலின் இன்ஸாடாகிராம் படங்களுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பல நடிகைகளும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அனுவின் கடைசி போட்டோவிற்கு நம்ம வீட்டு பிள்ளை சக நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் 'பேப்' என்றும் கமெண்ட் செய்திருந்தார். அனு இமானுவேல் கவர்ச்சி நிறைந்த அழகான புகைப்படங்களை பதிவேற்றி வருவதால் பல பிரபலங்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் .


Click it and Unblock the Notifications











