»   »  சூப்பர்.. அனு, சூப்பர்..

சூப்பர்.. அனு, சூப்பர்..

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர்டா படத்தின் மூலம் கவர்ச்சிக்கென்றே அறிமுகமானார் அனு.

ஆந்திராவைச் சேர்ந்த இவரை கோடம்பாக்கத்தில் இறக்கிவிட்டது வேறு யாருமல்ல, அவரது தாய்க்குலமே தான். முதலில்தனியாகவே சான்ஸ் வேட்டை நடத்திப் பார்த்தார் அனு. தயாரிப்பாளர்கள் கூப்பிட்டுப் பேசியதோடு சரி.. படத்தில்ஹீரோயினாக்க முன்வரவில்லை.

உடம்பை ஏகபோகமாய் வைத்திருக்கும் அனுவை கவர்ச்சி டான்ஸ் ஆடவே கூப்பிட்டார்கள். என் மகளை நான் ஹீரோயினாக்கிக்காட்டுகிறேன் என்று களத்தில் குதித்த தாயார், மகளுக்காக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து தயாரித்த படம் தான் சூப்பர்டா.

குறைந்த செலவில், ஹீரோயின் உள்ளிட்ட நடிகைகளுக்கு மிகக் குறைவான துணியில் மகா தெளிவாக பட்ஜெட் போட்டுஎடுக்கப்பட்ட படம் இது. ஹீரோக்களாக ராம்கி, குணால் ஆகியோர் நடித்தார்கள். படத்தில் கவர்ச்சியில் ஏக ரகளை செய்திருந்தார்அனு.

அனுவின் தொப்புளில் தேன் நிரப்பி... அதை ஹீரோ குடிப்பது போன்ற கருமாந்திர காட்சி எல்லாம் உண்டு. கூடவே ஷகீலா,சிந்தூரி, அனுராதா, அபிநயஸ்ரீ, ஷர்மிலி போன்றவர்களும் பிலிமில் சூடேற்றிவிட்டுப் போனார்கள்.

ராம்கிக்கு ஆக்ஷன் ரோல் எல்லாம் கொடுத்து குளிப்பாட்டி விட்டார்கள்.

அனு, சிந்தூரி, ஷகீலாவின் குளிர் ஜூரமூட்டும் ஸ்டில்களை எல்லாம் காட்டி படத்தை விற்க முயன்றார்கள். ஆனால், ஸ்டில்களில்இருந்த சதை அளவுக்கு, படத்தில் கதை இல்லை.

விக்கிற மாதிரி ஹீரோவோ, பேசுகிற மாதிரி கதையோ இல்லாததால் படத்தை யாருமே வாங்கவில்லை. படம் சூப்பர்டா.. வாங்கயாராவது வாங்கடா என்று சண்டை போடாத குறை தான். கூவிக் கூவி பார்த்துவிட்டு தாயாரே சொந்த ரிலீஸ் முடிவுக்கு வந்தார்.அப்படியே தெலுங்கிலும் படத்தை டப் செய்துவிட இருக்கிறார்களாம்.

இப்படியாக முதல் படம் புட்டுக் கொண்டாலும் அனுவின் தளராத, தாராள முயற்சிகளுக்கு கோடம்பாக்கம் கொஞ்சம் வளைந்தேகொடுத்து வருகிறது.

இப்போது மிஸ்டர் பாண்டி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அனு. ஹீரோ பாண்டியராஜன். (அது என்ன மாயமோதெரியலை.. கோலிவுட்டில் இவருக்கும் குணாலுக்கும் வருஷம் பூராவும் ஏதாவது ஒரு படம் இருந்து கொண்டு தான் இருக்கிறது)

அனுவின் குளியல் சீன், பாண்டியராஜன் எட்டிப் பார்ப்பது என ஏ ரகமாகவே படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவரைத்தவிர கேரளாவைச் சேர்ந்த இறக்குமதியான ஹர்ஷா என்பவரும் ஒரு ஹீரோயினி (கோடம்பாக்கம் பாஷை) ஆக நடிக்கிறார்.

கனகப்ரியா, தீபா என படத்தை சைடில் தூக்கி நிறுத்தும் துணை, இணை நடிகைகளும் உண்டு. தேவா இசையில் படத்தை டைரக்ட்செய்வது கார்த்திக்குமார். இவர் பாண்டியராஜன் இயக்கிய கலாட்டா கணபதி படத்தை எடுத்தவர்.

இந்தப் படம் தவிரவும் மேலும் ஒரு படத்திலும் அனு புக் ஆகி இருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil