Anupama: இனிமேல் அப்படியான படத்தில் நடிக்க மாட்டேன்.. அனுபமா எடுத்த முடிவுக்கு என்ன காரணம்?

சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்குவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நடிகை. தமிழ் சினிமாவில் இன்னும் அவர் ஒரு படத்தில் முழுவதுமாக கதாநாயகியாக நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை அனுபமா தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கூடுமானவரை அழுத்தம் திருத்தமான கதாபாத்திரத்தை தனக்கு நடிக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்களை அதிகம் தேர்வு செய்து நடிக்கிறார். அவ்வப்போது கிளாமர் போர்ஷன் இருக்கும் படங்களையும் தேர்வு செய்கிறார். இப்படி இருக்கும்போது அவர் நடிப்பில் வெளியாகி தெலுங்கில் ஹிட் அடித்த படம் தில்லு ஸ்கொயர். இந்த படத்தில் அவர் பாஸி லேடியாக நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் வணிக ரீதியாக நல்ல வெற்றியைக் கொடுத்தார்கள். இப்படி இருக்கும்போது நடிகை இந்த படத்தில் தான் பணியாற்றியது குறித்தும், இனிமேல் தான் இது போன்ற படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது, " இப்போது யாராவது தில்லு ஸ்கொயர் படத்தில் இருக்கும் எனது கதாபாத்திரத்தைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கச் சொன்னால் நடிக்க மாட்டேன். உண்மையைச் சொல்லப்போனால், என்னால் அந்த கதாபாத்திரத்தை சரியாக கையாள முடியவில்லை. அந்த கதாபாத்திரத்திற்கு நடிப்பின் மூலம் நான் எப்படி நியாயம் சேர்ப்பேன் என்ற கேள்வியும் பதற்றமும் இருந்து கொண்டே இருந்தது. தன்னம்பிக்கை இல்லாமல் தான், நான் படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன்.

Anupama Parameswaran Opens About She wasn t comfortable Tillu Square Movie role
Photo Credit:

பயம்: படக்குழு எனக்கு சாதகமாகத்தான் இருந்தார்கள், ஆனால் என்னால் அந்த கதாபாத்திரத்தின் பலத்தை தாங்க முடியவில்லை. அந்த படம் முடியும் வரை நான் நானாகவே இல்லை. பயத்துடனே இருந்தேன். ஆனால் மக்கள் படத்தைப் பார்த்துவிட்டு எனது கதாபாத்திரத்தை பாராட்டினார்கள். அது எனக்கு திருப்தியையும் ஆசுவாசத்தையும் கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால் நிம்மதியை கொடுத்தது. நான் நம்பிக்கையற்றவளாக இருந்தாலும், கதாபாத்திரத்தை மிகவும் நல்ல முறையில் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

டிராகன்: தில்லு ஸ்கொயர் படத்திற்காக அனுபமா பரமேஸ்வரன் பாராட்டுக்களை எதிர்கொண்டது போல, கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். தமிழில் இந்த ஆண்டு வெளியான டிராகன் படம் வெளியான பின்னர், டிராகன் படத்தின் கதை தனக்கு சொல்லப்பட்டது வேறு என்றும், படமாக்கப்பட்டது வேறு என்றும் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X