»   »  மறுபடியும் அனுஷ்கா

மறுபடியும் அனுஷ்கா

Subscribe to Oneindia Tamil

ரெண்டு படத்தில் மாதவனுடன் பின்னிப் பிணைந்து விளையாடி, திடீரென மறைந்து போன அனுஷ்கா மீண்டும் வருகிறார். திறட்சியான கவர்ச்சியுடன் சுந்தர்.சியுடன் ஜோடி போட்டு துவம்சம் செய்ய வருகிறார்.

சரண் கண்டுபிடிப்பு அனுஷ்கா. வட்டாரம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தார் அனுஷ்கா. ஆனால் என்ன காரணத்தாலோ திடீரென அப்படத்திலிருந்து தூக்கப்பட்டார் அனுஷ்கா.

அவர் செய்த பந்தாக்கள், அலம்பல்கள்தான் இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. சரண் படத்தில் கல்தா கொடுக்கப்பட்டதால் விசனத்தில் இருந்த அனுஷ்காவை கூப்பிட்டு தனது ரெண்டு படத்தில் மாதவனுடன் ஜோடி சேர விட்டார் சுந்தர்.சி.

இப்படத்தின் மூலம் தனது கெப்பாசிட்டியை வெளிக்காட்டி அசத்தினார் அனுஷ்கா. ஆனாலும் அடுத்தடுத்து அவருக்குப் புதுப்படங்கள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்குக்குப் போய் விட்டார் அனுஷ்கா.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார் அனுஷ்கா. தன்னை வைத்து முதலில் இயக்கி அதே சுந்தர்.சி.க்கு ஜோடியாக இம்முறை அசத்தவுள்ளார் அனுஷ்கா.

படத்துக்கு ஐந்தாம்படை என்று பெயரிட்டுள்ளனர். படம் முழுக்க அனுஷ்காவின் கவர்ச்சி களியாட்டம் களேபரமாக இருக்கப் போகிறதாம். தன்னை முதலில் இயக்கிய சுந்தர்.சியுடன் ஜோடியாக நடிப்பது புதிய அனுபவமாக இருக்கும் என்று புல்லரிப்போடு கூறுகிறார் அனுஷ்கா.

ஐந்தாம்படையில் சுந்தர்.சி. படு மசாலா நாயனாக நடிக்கவுள்ளார். கிட்டத்தட்ட சகலாகலாவல்லவன் போல இப்படமும் அத்தனை பொழுதுபோக்கு அம்சங்களும் கூடியதாக இருக்குமாம்.

ரெண்டு பேரும் அசத்துங்க!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil