»   »  கண்டமேனிக்கு சாப்பிட்டு இஞ்சி 'அடுப்பழகி'யான அனுஷ்கா

கண்டமேனிக்கு சாப்பிட்டு இஞ்சி 'அடுப்பழகி'யான அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா சாப்பிட்டு சாப்பிட்டு உடல் எடையை 15 கிலோ அதிகரித்துள்ளாராம்.

ஆர்யா, அனுஷ்கா நடித்து வரும் படம் இஞ்சி இடுப்பழகி. இந்த படத்தை தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள். படத்தில் அனுஷ்கா ஒல்லியாகவும், குண்டாகவும் வருகிறாராம். முதன்முதலாக அனுஷ்கா தனது உடல் எடையை கூட்டி குறைக்கிறார்.

இந்நிலையில் அனுஷ்கா பற்றி தகவல் கிடைத்துள்ளது.

யோகா, ஒர்க் அவுட்

யோகா, ஒர்க் அவுட்

யோகா கற்றுள்ள அனுஷ்கா தினமும் இரண்டு முறை ஒர்க்அவுட் செய்பவர். இது தவிர உணவுக் கட்டுப்பாடு அதாங்க டயட்டில் வேறு இருப்பவர் அனுஷ்கா. இத்தனையும் செய்து தான் அனுஷ்கா உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

சாப்பாடு

சாப்பாடு

வெயிட் போட்டுவிடும் என்று அனுஷ்கா இத்தனை நாட்களாக சாப்பிடாத உணவு வகைகளை எல்லாம் தற்போது கவலை இல்லாமல் மூக்கு முட்ட சாப்பிட்டு வருகிறார். இப்படி சாப்பிடுகிறவர் ஜிம்முக்கு போவதையும் நிறுத்தியுள்ளார்.

15 கிலோ

15 கிலோ

கண்டமேனிக்கு சாப்பிட்டு ஒர்க் அவுட் செய்யாமல் இருப்பதால் அனுஷ்காவின் உடல் எடை 15 கிலோ அதிகரித்துள்ளது. நடிகைகள் டயட்டில் இருக்கையில் இந்த அனுஷ்கா ஏன் இப்படி செய்கிறார் என்று நினைக்கிறீர்களா? எல்லாம் இஞ்சி இடுப்பழகி படத்திற்காகத் தான்.

குண்டு

குண்டு

அனுஷ்கா குண்டாக இருக்கும் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கிறார். அதன் பிறகு ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைத்துவிட்டு ஒல்லியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

சத்தான உணவு

சத்தான உணவு

உடல் எடையை அதிகரிக்க அனுஷ்கா நன்றாக சாப்பிட்டாலும் சத்தான உணவாக பார்த்து பார்த்து சாப்பிடுகிறாராம். 15 கிலோ எடையோடு நின்றுவிடாமல் அனுஷ்கா படத்திற்காக மேலும் தனது எடையை அதிகரிக்க உள்ளாராம்.

English summary
Anushka has ditched workout and gained 15 kg for her upcoming movie Inji Iduppazhagi with Arya.
Please Wait while comments are loading...