»   »  'ருத்ரமாதேவி' நகைகளை அறிமுகம் செய்த அனுஷ்கா

'ருத்ரமாதேவி' நகைகளை அறிமுகம் செய்த அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அனுஷ்கா சென்னையைச் சேர்ந்த நகைக் கடை ஒன்றுடன் இணைந்து ருத்ரமாதேவி நகைகளை சென்னையில் நேற்று அறிமுகம் செய்தார்.

அக்டோபர் 9 ம் தேதி அனுஷ்காவின் நடிப்பில் ருத்ரமாதேவி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தில் ராணியாக நடிகை அனுஷ்கா நடித்திருக்கிறார்.

அனுஷ்காவுடன் இணைந்து அல்லு அர்ஜுன், ராணா டகுபதி, சுமன், நித்யாமேனன், கேத்தரின் தெரசா, பிரகாஷ் ராஜ் மற்றும் கிருஷ்ணம் ராஜூ ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

Anushka Joins hand with NAC Jewellers

பலமுறை தள்ளிப்போன இந்தத் திரைப்படம் தற்போது அக்டோபர் 9 ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

இயக்குநர் குணசேகர் ருத்ரமாதேவி படத்தை இயக்கியதுடன் மற்றவர்களுடன் இணைந்து படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.இந்தியாவில் முதன்முறையாக ஒரு வரலாற்றுத் திரைப்படம் 3Dயில் வெளியாவது இதுவே முதல்முறை.

எனவே படத்தின் வெளியீட்டுத் தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா அணிந்து நடித்திருந்த நகைகளைப் போன்று சென்னையைச் சேர்ந்த நகைக் கடை ஒன்றில் நகைகளை அறிமுகம் செய்திருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அனுஷ்கா, ருத்ரமாதேவி நகைகளின் சில்லறை விற்பனையை நேற்று தொடங்கி வைத்தார்.

அடுத்த வாரம் திரையைத் தொடவிருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடிப் படமாக வெளியாகும் ருத்ரமாதேவி மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

English summary
Anushka has joined hands with a Jewellers to launch the special line Rudramadevi collections in Chennai. The collections will be displayed at the store for retail purpose. Rudramadevi was likely to hit screens on Oct 9.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil